பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 நினைவு அலைகள்

பிரிவையும் ஒரே உயர்நிலைப் பள்ளியில் இயக்கும் நிலையை உருவாக்கிற்று.

போதிய அவகாசம் கொடுத்து, வேண்டியவற்றை எல்லாம் ஆயத்தம் செய்து கொண்ட பிறகே, புதிய முறைகளை நடைமுறைப் படுத்துவது பிரிட்டானிய செயல்முறை ஆகும்.

1944 இல் பிரிட்டன் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது எனலாம்.

அந்த நெருக்கடியிலும் கல்விக் கொள்கை, திட்டம் பற்றி உயர்மட்டத்தில் ஆலோசனை செய்தார்கள். அனைத்துக்கட்சி பேராளர் களைக் கொண்ட ஒரு குழு, பலமுறை கூடி, ஆசிரியர்களைக் கலந்து திட்டம் தீட்டியது. பின்னர் அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றினார்கள்.

அதன் அடிப்படையில்தான் இலவசக் கட்டாயக் கல்வி கொடுக்கப்பட்டது.

‘பொதுப் பள்ளிகள் என்ற பெயரில் குபேரர் வீட்டுப் பிள்ளை களுக்காக நடத்தப்பட்ட சில பள்ளிகள் மட்டும் சம்பளம் வாங்கின. அவை உண்மையில் பொதுப் பள்ளிகள் ஆகா. அவற்றில் தலையிடாது, மற்ற எல்லாப் பள்ளிகளையும் இலவசப் பள்ளிகளாக்கிவிட்டு, இலவசக் கட்டாயக் கல்வியைச் செம்மையாகச் செயல்படுத்தினார்கள்.

பள்ளிக்குப் போகாவிட்டால் வழக்கு

இலண்டன் உலகப் பெரு நகரங்களில் ஒன்று. அவ்வளவு பெரிய நகரில், 1951 இல் எவ்வளவு மாணாக்கர், பள்ளிக்குச் செல்லாதவர்கள்?

ஆறு திங்களுக்கு ஒரு முறை பள்ளிக்கு வராதவர்கள் கணக்கைத் தணிக்கை செய்கிறார்கள்.

அப்படிச் செய்ததில், அறுநூறு பேர்கள் வராதவர்கள் என்று தெரிந்தது.

அப்பட்டியல் வருகை அலுவலர்கள் இடம் கொடுக்கப்பட்டதாம். அவர்கள், தங்கள் பகுதிப் பட்டியலைக் குறித்துக் கொண்டார்கள்.

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் பேரில் வழக்குத் தொடர வேண்டுமென்பது சட்டம்.

‘வருகை அலுவர்கள் நேரே வழக்குத் தொடர்ந்துவிட முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/372&oldid=623297" இலிருந்து மீள்விக்கப்பட்டது