பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 நினைவு அலைகள்

பர்மிங்காமில் ஒருநாள் காலை, பெண்கள் பள்ளி ஒன்றைப் பார்வையிட்டோம். *

மூன்றாம் வகுப்புச் சிறுமிகள், இளஞ் செஞ்சிலுவைச் சங்கம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அதை முழுமையாகக் கவனித்தோம். ‘பிற நாடுகளோடு நட்புறவை வளர்த்தல் இளஞ்செஞ்சிலுவைச் சங்கத்தின் நோக்கங்களில் ஒன்றாம்.

இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். என் ஆலோசனைப்படி, அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதைக் கேள்விகளாகக் கேட்டார்கள்.

என் மனைவி காந்தம்மா அவர்களுக்குப் பதில் கூறினார். கேள்விகள் அனைத்தும் குழந்தைகள் மையமாகக் கொண்டிருந்தன. இந்தியக் குழந்தைகள் எங்களைப்போல், சின்னஞ்சிறு வகுப்பு களிலும் நோட் புத்தகத்தில் எழுதாமல், கரும்பலகையில் எழுதிப் பழகுவானேன்?

இது ஒரு கேள்வி. சிலேட்டானால் ஒவ்வொரு பயிற்சியையும் அழித்துவிட்டு, அடுத்ததை எழுதிப் பார்க்கலாம்.

ஒரே சிலேட்டை இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பயன் படுத்தலாம்.

நோட்டென்றால், எழுதின தாளை மீண்டும் பயன்படுத்த முடியாதே! எத்தனையோ நோட்டு'கள் வாங்க வேண்டியிருக்குமே.

இப் பதில், வகுப்பில் இருந்த ஒரு சிறுமியின் நெஞ்சத்தில் தைத்து விட்டது. தன்னைப் போன்ற இந்தியக் குழந்தைகளுக்கு உதவ வேண்டுமென்ற உணர்வு அச் சிறுமியிடம் எழுந்தது.

‘அம்மா! நான் நிறையக் காகிதம் தருகிறேன். தயவு செய்து இந்தியாவிற்கு எடுத்துச் சென்று, குழந்தைகளுக்கு வழங்குங்கள் என்று கெஞ்சிற்று.

நெஞ்சை நெகிழ்விக்கும் அந் நிகழ்ச்சி இன்றும் பசுமையாக இருக்கிறது.

அன்பளிப்புக் கொடுக்க முன்வரும் அளவுக்குச் சின்னஞ் சிறு வயதிலேயே உரிமை பெற்றிருக்கும் அக் குழந்தை பெரும்பேறு பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/374&oldid=623299" இலிருந்து மீள்விக்கப்பட்டது