பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 நினைவு அலைகள்

‘கண்டிப்பான தாவர உணவுக்காரர் என்றதால், மாட்டுப் பால் கொடுக்காமல் சோயா மொச்சையின் பாலைக் கொடுத்தோம் என்ற விளக்கத்தைப் பெற்றோம்.

எங்களுக்கு மாட்டுப்பால் தள்ளுபடி அல்ல என்று சொல்லி, அதைப் பெற்றோம்.

ஆங்கில இலக்கிய மேதையான பெர்னாட்ஷா, தாவர உணவுக்காரர். அவரைப் பின்பற்றிச் சில ஆயிரக்கணக்கில், புலால் உண்ணாத பிரிட்டானியர்கள் இருப்பதாகவும், அவர்களுக்காக முக்கிய ஊர்களில், தாவர உணவுச் சாலைகள் இயங்குவதாகவும் கேள்விப்பட்டேன்.

மாட்டுப் பால்கூடச் சேர்த்துக் கொள்ள மறுப்பவர்களை வீகன்கள் என்று அழைப்பார்களாம்.

-

பிரிட்டிஷ் மியூசியம் - நூலகம்.

f பசுமையும் குளுமையும் கொண்ட ஏரி மாவட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதில் இரு நாள்களைச் செலவிட்டோம். சுற்றுலாப் பேருந்து காலையில் புறப்படும். இரவு திரும்பிவந்து ஒட்டலில் சேர்க்கும். பகல் உணவு? ஒட்டலில் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தார்கள்.

அந்தப் பகுதியில் கோடிக்கணக்கான மரங்களை நட்டு வளர்ப்பதில் முனைந்து இருந்தார்கள். இது நமக்கு ஒரு பாடம்.

இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் அரும்பொருட் காட்சிச்சாலை மிகப்பெரியது. அதோடு இணைந்துள்ள நூலகம் உலகப் புகழ் பெற்றது. அங்கு உள்ள பழஞ்சுவடிகள், புது நூல்கள் வற்றாத கருவூலங்கள் ஆகும்.

எகிப்து நாட்டின் தொல் பொருள்கள் - இந்தியச் சிற்பங்கள் - கிரேக்கச் சிலைகள் - இப்படி எத்தனையோ அரும் பொருள்களைக் கொண்டது அக் காட்சிச்சாலை.

அந் நூலகம் உலக மேதைகளின் பண்ணையாகப் பயன்பட்டு வருகிறது.

அந்த நூலகத்திற்கு நாங்கள் சென்றபோது, அங்கிருந்து ஆய்ந்து, பட்டம் பெற்ற டாக்டர் அம்பேத்கார் நினைவுக்கு வந்தார்.

மாணவப் பருவத்தில் ஏற்பட்ட எரிச்சலூட்டும் இழிவுகளையும் ாங்கிக் கொண்டு, கரும்மே கண்ணாக இருந்து சிறந்த அறிவாளியாக வளர்ந்த அம்பேத்கார் வழியை நம் இளைஞர்கள் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/376&oldid=623301" இலிருந்து மீள்விக்கப்பட்டது