பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ-து-சுந்தரவடிவேலு 61

உலகப் புகழ் பெற்ற கார்ல்மார்க்ஸ் நினைவுக்கு வந்தார்.

அங்கிருந்து எண்ணற்ற நூல்களைப் படித்து, மூலதனம் என்ற நூலை அவர் எழுதியது நினைவுக்கு வந்தது.

நம்ப முடியாத செய்தி

நாங்கள் பிரிட்டனில் தங்கியிருந்தபோது, நம்பமுடியாத செய்தி ஒன்றை நாளிதழ்களில் படித்தோம்.

ஒர் அட்டைப் பெட்டித் தொழிற்சாலை குறிப்பிட்ட விலைகளில் அதனுடைய பொருள்களை விற்று வந்ததாம். அப்படி விலைகளை முடிவு செய்யும்போது, இவ்வளவு விழுக்காடு இலாபம் சம்பாதிக்க வேண்டு மென்ற எதிர்பார்ப்பில், முடிவு செய்தார்கள். ஆண்டின் இறுதியில் வரவு செலவு கணக்குத் தணிக்கையில் திட்டமிட்டதைவிடக் கூடுதலாக இலாபம் பெற்றிருப்பது தெரிந்தது. அந் நிலையில் சாதாரணமாக என்ன எதிர்பார்க்கலாம்? பங்குதாரர்களுக்குக் கூடுதலான ஈவுத் தொகை, தொழிலாளர்களுக்கு அதிகப்படியான போனஸ் இவற்றை எதிர்பார்ப்போம். பங்குதாரரும் தொழிலாளரும் போலவே வாடிக்கைக்காரர்களும் இலாபத்திற்குப் பங்காளிகள் - இப்படிக் கருதினார்கள், அந்தத் தொழிற்சாலை இயக்குநர்கள்; வாடிக்கைக்காரர் களுக்குக் குறிப்பிட்ட விழுக்காட்டில், தள்ளுபடி’ பணமாக அனுப்பப் படும் என்று அறிவித்தார்கள். இதைப் படித்த நாங்கள், அது ஒர் ஏமாற்று வித்தையாக இருக்கலாமென்று நினைத்தோம்.

‘நமக்கேன் இதுபற்றிக் கவலை என்று நினைத்து மறந்து விட்டோம். ஆனால்

நாங்கள் சென்னைக்குத் திரும்பியபோது, இலண்டன் ‘ஆஸ்டின் கம்பெனியிடமிருந்து வந்த கடிதம் ஒன்று எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது. பிரித்துப் பார்த்தேன். என் மனைவியும் படித்து விட்டு உறுதிப் படுத்திய பிறகே அதை நம்பினேன்.

அக் கடிதம் சொன்ன செய்தி என்ன? ‘தங்களுக்கு விற்ற காருக்கு விலை என்ன விலை உண்டோ அதற்கு மேலாக ஆறு பவுன்கள் வாங்கிவிட்ட தவறைக் கம்பெனி கணக்குத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டி உள்ளார். அதற்காக மன்னிப்புக் கோருகிறோம்.

‘அக் கூடுதல் பணத்தை சென்னையில் உள்ள உங்கள் வங்கிக் கணக்கில் சேர்த்துவிடும்படி ஆணையிட்டு உள்ளோம். இது தகவல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/377&oldid=623302" இலிருந்து மீள்விக்கப்பட்டது