பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 நினைவு அலைகள்

‘தங்கள் இசைவு கிடைத்தால், இப்போது கல்லூரியில் இருந்து விலகிக் கொண்டு அடுத்த முறை முதல் வகுப்பு தொடங்குகையில். வந்து சேர்ந்து கொள்ளுகிறேன்’ என்று அப் பெண்மணி தெளிவாகக் கூறினார்.

கல்லூரி இயக்குநர், வெகுளி கொள்ளவில்லை; எரிச்சல் படவும் இல்லை. மாறாகப் புன்முறுவலோடு, அப்பெண்மணியை இரண்டாம் வகுப்பிலிருந்து, முதல் வகுப்பிற்கு மாற்றியிருப்பதாக, ஒரு சீட்டில் எழுதி, அந்த அம்மையாரிடம் கொடுத்தார். அப்படிக் கொடுக்கும்போது,

‘நம்பிக்கை இழக்க வேண்டாம். தொடக்கத்தில், உண்பதுகூடக் கடினமாகவே இருந்திருக்கும். மேலும் ஏதாவது துன்பம் நேர்ந்தால், என்னிடம் வந்து சொல்லும் என்று ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்தார். ஒரளவு தோல்வி மனப்பான்மையோடு வந்த பெண்மணியை ஊக்கப்படுத்தி, கல்வி முயற்சியில் தொடர வைத்த முதல்வரின் அணுகுமுறை, நம் கல்வியாளர்களின் சிந்தனைக்கு உரியதாகும்.

உளக்கம் அளித்தல்

அந்தக் கல்லூரியில், இரண்டொரு பாடங்களைக் கவனித்தேன்.

புகைப்பட வகுப்பில் நடந்ததைப் படியுங்கள். வகுப்பில், பத்துப் பன்னிரண்டு கற்றுக்குட்டிப் புகைப்படக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் முந்திய வகுப்பிற்கும் அந்த வகுப்புக்கும் இடையில் பயிற்சியின் பகுதியாக, சில புகைப்படங்களை எடுத்திருந்தார்கள். ஒவ்வொரு பயிற்சியாளரும் அழைக்கப்பட்டார். அவர், தாம் எடுத்த படத்தைக் கரும் பலகையின் நடுவில் வைத்துப் பெரிய ஊசியால் குத்தினார்.

என்னை மதிப்பிடச் சொல்லி இருந்தால், எதுவும் சரியாக வரவில்லை என்று உளறி இருப்பேன்.

வகுப்பு ஆசிரியரோ, சகமானாக்கரோ அப்படிச் சொல்லவில்லை. பின் எப்படி மதிப்பிட்டார்கள்?

‘இப் படத்திற்கு மேலும் சில வினாடி ஒளிக்கதிர் தேவை’ இது ஒரு மதிப்பீடு.

‘அப் படத்தை எடுக்கையில் கண்ணாடி மையப் பகுதிக்கு வந்திருந்தால் நன்றாய் இருக்கும்.’

இது செய்தால், அது செய்தால், சரியாக வந்திருக்கும்’ என்று சொல்லி ஊக்கப்படுத்தினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/380&oldid=623306" இலிருந்து மீள்விக்கப்பட்டது