பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. சுந்தரவடிவேலு 365

வளர்க்கும் வழி அதுவே. தாயகம் திரும்பியதும் அதை எண்ணற்ற _ம்ெநாட்டு ஆசிரியர்களிடம் சொன்னேன். ஒரளவு பலிக்கும் என்று தான்றிற்று. அதற்கு விலையாக நான் பெற்றது. என்ன தெரியுமா? பெரியவர்களின் பொறாமையை வரவழைத்துக் கொண்டேன்.

வழ வழ என்று எழுதாதே

எனது கல்விப் பயணத்தில், ஒரு திங்களை இலண்டன் பெருநகரில், _lவி அலுவலரோடு இருந்து, அங்குள்ள கல்வி நடை முறைகளைப் பயில ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

என்ன உடன்படிக்கை? சம்பளம், பயணப்படி, இழப்பீடு முதலிய _தையும் கேளாமல், என் செலவிலும் என் பொறுப்பிலும், ஆனால், அவர்கள் விதிமுறைகளுக்கு ஏற்பப் பணிகளைக் கவனிப்பேன் என்று ாழுதிக்கொடுத்துவிட்டு அந்த அனுபவத்தைப் பெற்றேன்.

அப்போது, பிரிட்டனில் சிக்கன இயக்கமொன்று நடந்து கொண்டிருந்தது. அரசுக் கோப்புகளில் உள்ள குறிப்புகள், ஆணைகள் முதலியன தேவைக்கும் அதிக நீளமாக இருந்தனவாம்.

அவற்றைச் சுருக்கமாக எழுதவும் வெளியிடவும் வேண்டுமென்ற கருத்து நாடு தழுவியதாக இருந்தது.

‘அலுவலகங்களில் எழுத்துச் சிக்கனம்’ பற்றி விரிவான ஆலோசனை _றும்படி, உயர்மட்ட ஆணையம் ஒன்று பிரிட்டானிய அரசால் யெமிக்கப்பட்டதாம். அது அரசின் கோப்புகளை - விளம்பரங்களை விரிவாக ஆய்ந்து திட்டவட்டமான பரிந்துரைகளைச் செய்ததாம்.

அவற்றின் அடிப்படையில், சுருங்கச் சொல்லும் முயற்சிகள் அரசு அலுவலகங்களிலும், பிற அலுவலகங்களிலும் நடந்து கொண்டிருந்தன.

‘இலண்டன் பெருநகரக் கல்வி அலுவலகத்தில் மிகப்பெரிய கோப்பு |தனை பக்கங்கள் கொண்டது? என்று வினவினேன்.

கல்வி ஆலோசகர், மிகப் பெரிய கோப்பைக் கேட்டு வாங்கி, ான்னிடம் காட்டினார். அது இருபத்தினான்கு பக்கங்கள் கொண்டது. அதற்குமேல் பெரிய கோப்பு கிடையாது என்று உறுதி கூறினார். ‘நனைந்து சுமப்பதில் நம்மிடம் பாடங் கேட்டுக்கொண்டு பாகலாமே! என்று எனக்குத் தோன்றியது.

இந்தியாவில், அரசு, பொதுத்துறை முதலிய அலுவலகங்களில் வளர்ந்து கிடக்கும் கோப்புகளில் பாதி ஏடுகள், தேவையற்று - வேகம் நடுக்கும் புல் பூண்டுகள் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/381&oldid=623307" இலிருந்து மீள்விக்கப்பட்டது