பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 நினைவு அலைகள்

விவகாரங்களை வளர்த்துக் கொண்டு போகவே, தாம் அமர்த்தப்பட்டு இருப்பதாக, இந்திய ஊழியர் அனைவரும் நினைக்கிறார்கள் என்பது மிகையல்ல. -

‘குறிப்பிட்ட ஒரு பணியைக் குறிப்பிட்ட விரைவோடு முடித்து வைக்கவே அலுவலில் இருக்கிறோம்’ என்ற உணர்வுடைய இந்திய ஊழியரை - பித்தரைக் காண்டல் அரிதினும் அரிது.

வேதனையான தாமதம்

அண்மை யில் வேதனையான ஒரு தவக்கம் என் கவனத்திற்கு வந்தது.

அரசுத் துறையில் பணிபுரிந்த ஒர் அம்மையார் இறந்து விட்டார் அவருடைய கணவர் குடும்பப் பென்சனுக்கு மனுப் போட்டார். அய்ந்தாண்டு காலம் கேட்டதையே கேட்டுக் கீழிடத்துத் தகவலுக்கும் மேலிடத்து வழிகாட்டலுக்கும் அனுப்பி, கால தாமதம் செய்தார்கள். உரிய அலுவலர்கள். கடைசியில்,

‘மறைந்த திருமதி மலர்விழியின் கணவர் திரு. முருகன் ஒருவரே அம்மையாரின் வாரிசு என்று இதழில் சொல்லப்பட்டு இருக்கிறது: திருமதி. மலர்விழி முருகன் என்பதே அவரது ஊழியப் பட்டியில் கண்ட பெயர். எனவே சான்றிதழை ஏற்றுக்கொண்டு பென்சன் கொடுக்க இயலாது’ என்று பதில் வந்தது.

சான்றிதழ் பெற்ற, நான்காவது ஆண்டில் இப்படியொரு பதில். இது நமக்குள்ள நாட்டுப் பற்று, இனப் பற்று, சமுதாயப் பற்று. மனிதாபிமானம் ஆகியவற்றிற்குச் சான்றிதழாகும்.

நயாகரா அருவியெனப் பேச்சு அதற்கு மேல் ஏதும் இல்லை.

தேவையில்லாத அழிவு

அது கிடக்கட்டும். ‘அலுவலக எழுத்துச் சிக்கனத்திற்கு முன்னுரிமை கொடுக்கும்படி, என்ன நெருக்கடி ஏற்பட்டது? “ என்று இலண்டன் கல்வி அலுவரைக் கேட்டேன்.

‘இரு பற்றாக்குறைகள் காரணம். ஒன்று, ஆள் பற்றாக்குறை; இது உலகப் போரின் விளைவு. மற்றொன்று, காகிதப் பற்றாக்குறை: இதுவும் உலகப்போரின் பின் விளைவாகும்’ என்றார்.

போர் என்ற பெயரால், கோடிக்கணக்கான உயிர்க் கொலைகளையும் கோடானுகோடி மதிப்புள்ள பொருள்களையும் பொசுக்கிவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/382&oldid=623308" இலிருந்து மீள்விக்கப்பட்டது