பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

367 IJI a “FI ந்த ரவ 19 வே I’

ப்ெபடிச் சில்லறைச் சிக்கனத்தைத் தேடுவது, அவ்வளவு சரியான வாழ்க்கை முறையாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அதைச் சொல்லி இலண்டன் கல்வி அலுவலரைப் புண்படுத்தவில்லை.

பிரிட்டனில் பொதுத்தேர்தல்

திரு. அட்லி, பிரிட்டானியப் பிரதமராக ஆண்டுகொண்டிருந்த பொது, நாங்கள் அந்த நாட்டிற்குச் சென்றோம். நாங்கள் அங்குத் தங்கியிருக்கையில் காலத்திற்கு முந்தி, திடீரென இடைக்காலப் பொதுத் தேர்தலுக்கு நாள் குறித்து அறிவிப்பு வந்தது.

அடுத்த நாள் ஒரு மாநகராட்சிப் பள்ளியைப் பார்வையிட்டேன். பகல் உணவு வேளையில் தேர்தல் பற்றிப் பேச்சு வந்தது. அங்கிருந்த ஆசிரியர்கள், எக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை வெளிப்படையாகவே சொன்னார்கள். வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கப் போவதாகச் சொன்ன அவர்களிடம் வெறுப்போ, கசப்போ எழவில்லை.

மக்கள் ஆட்சிக்கு அடிப்படை வாக்குரிமை மட்டுமல்ல; விருப்பப் படி வாக்களிக்கவும், அதனால் எந்தத் தொல்லைக்கும் ஆளாகாமல் காக்கப்படவுமான சூழ்நிலை; அத்தகைய சூழல் அந் நாட்டில் வளர்க்கப்பட்டிருக்கிறது. ‘தங்களுக்கு வாக்களித்தார்களா? இல்லையா? என்று புலன் விசாரித்து, அதற்காக எப் பிரிவினரையும் பழிவாங்கும் போக்கு அந் நாட்டுக்குப் புறம்பானது என்று

கேள்விப்பட்டேன்.

மக்களின் பண்பு

நான்கு பேர்களை வைத்துக்கொண்டு, இன்ன கட்சிக்கு வாக்களிப் பேன்’ என்று சொன்னதைக்கூட, ஒருவருக்கு எதிராகப் பயன்படுத்த மாட்டார்களாம்.

இவை இந்தியர்களுக்குப் பகற் கனவாக இருக்கிறது: இருக்கும். நம் பக்குவம் அத்தகையது.

தேர்தல் அறிவித்ததும், இலண்டன் கல்வி அலுவலர் எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரு சுற்று அறிக்கை அனுப்பினார். அது என்ன சொல்லிற்று?

பள்ளிக்கூட... மண்டபங்களைப் பள்ளிக்கூட வேலைகளுக்கு

இடையூறு இல்லாதபடி, தேர்தல் கூட்டங்களுக்குக் கொடுக்க

வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/383&oldid=623309" இலிருந்து மீள்விக்கப்பட்டது