பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 369

இலண்டனில் இருந்தபோது, என் பிறந்த நாளில், பாயசத்தோடு சாப்பாடு போட்டார், திரு. மாத்ருபூதம். நான் புது சூட் தைத்துக்கொள்ள வேண்டும் என்று என் மனைவி வற்புறுத்தினார்: அதற்கு இசைந்தேன்.

இலண்டன் தையற் கடைக்காரரும் நம்மூர்த் தையற்கடைக்காரரைப் போன்று குறித்த தவணையன்று சூட்டைக் கொடுக்காது நடக்க வைத்தார்.

எனினும், எனது நாற்பதாம் ஆண்டு பிறந்த நாள் அன்று, புது ‘குட்டில் வெளிச்சம் போட்டேன்.

47. குத்துாசி குருசாமிக்கு நெஞ்சுவலி

குழந்தையை பற்றிய சிந்தனை

பகலும் இரவும் அடுத்தடுத்து வரும்; சம அளவில் வருவதில்லை. சில பருவங்களில் பகல் நீண்டும், இரவு சுருங்கியும் வரும்.

உலகின் சில பகுதிகளில் குறிப்பிட்ட நாள்களில், இரவு பத்து மணிக்கு மேலும் சூரிய வெளிச்சம் கிடைக்கும்.

அதேபோல், மாந்தர்களுக்கும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். பலருக்கு முந்தியதைவிடப் பிந்தியது அதிகமாக இருக்கும்.

பிரிட்டனிலிருந்தபோது என் மனைவிக்கு அடிக்கடி குழந்தை திருவள்ளுவனைப் பற்றிய நினைவு எழும். எப்படி இருக்கிறானோ என்ற ஏக்கம் பிறக்கும்.

‘பச்சைக் குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டேனே’ என்று வேதனைப்படுவார். நான் ஊமையாகி விடுவேன்.

வாரந்தோறும் சென்னையிலிருந்து ஒழுங்காகக் கடிதம் வரும். விமான அஞ்சலில் வந்த அக் கடிதத்தைப் பதற்றத்தோடு உடைத்துப் படிப்பார்.

குருசாமி செய்தி குத்தீட்டியாயிற்று

ஒரு முறை சென்னைக் கடிதம் ஒன்றைப் படிக்கையில்

காந்தம்மாவின் முகத்தை வருத்தம் கவ்விற்று. மேலே படிக்க

முடியாமல் கடிதத்தை என்னிடம் கொடுத்துவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/385&oldid=623311" இலிருந்து மீள்விக்கப்பட்டது