பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவேலு 371

காந்தம்மாவும் நானும் அக் கூட்டுக் குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்த பொதிலும் எங்களால் அவர்களுக்குச் சிறிதும் நிதி உதவி இல்லை.

காந்தம்மா அலுவலில் இல்லை. என் ஊதியம் மற்ற எல்லோருடைய மொத்த ஊதியத்திலும் அதிகம்.

ஆனால், 1946 ஆம் ஆண்டிலேயே கார் வாங்கிவிட்டதால், என் வாவுக்கும் செலவுக்கும் சரியாகப் போயிற்று: மாமனார் குடும்பத்திற்கு என்னால் உதவி செய்ய முடியவில்லை.

சா. குருசாமி, 1946 ஆம் ஆண்டிலேயே, பெரியாரின் முழு நேரத் தொண்டராக இருக்கவேண்டுமென்னும் துடிப்பால், அரசு ஊழியத்தில் இருந்து ஒய்வுபெற்றுக் கொண்டார்.

அய்ம்பத்து அய்ந்து வயது அடைவதற்கு முன்பே ஓய்வு பெற்றதால் அவருக்குக் கிடைத்த ஓய்வூதியம் கைச் செலவுக்குக் கூடப் பற்றாது.

மாநகராட்சி ஆசிரியைகளான திருமதி குஞ்சிதம், செல்வி

வெங்கடேசம்மாள் பெற்ற ஊதியம் சொற்பம்.

எந்த நடுத்தர வகுப்பு மனிதரும் பணமுடையால் நலிந்திருப்பர். குருசாமியார் பொறுப்போ குடும்பத்திற்கு அப்பாலும் விரிந்தது.

தன்மான இயக்கத்தின் பேச்சாளர்களாகிய பொன்னம்பலனார், அழகிரிசாமி, எஸ். வி. லிங்கம் முதலியோர் சென்னைக்கு வந்தால், குருசாமியாரோடுதான் தங்குவார்கள்.

அச் செலவுக்கும் குருசாமி சுணங்க மாட்டார். இத்தகைய செலவுக்காக வீட்டிலுள்ள நகையில் ஒன்று ஒசைப்படாமல் அடகுக் கடைக்குப் போகும். --

தன் சாதியில் அய்ம்பதாயிரம் ரூபாயோடு பெண் கொடுக்க வந்ததை உதறி விட்டு, கொள்கை காரணமாகச் சாமான்ய குடும்பத்தில் பெண் எடுத்துக்கொண்டதோடு, பொது உடைமைக் கொள்கையில் இருந்த பிடிப்பினால், குடும்பம் முழுவதையும் தாங்குவதோடு, இயக்கத்தவர் களையும் தாங்கும் கடமையை மகிழ்வோடு மேற்கொண்டார்.

குடும்ப நகைகள் ஒவ்வொன்றாக அடகுக் கடைக்குப் போவதைப் பற்றியும் அவர் கவலைப்பட்டது இல்லை.

இயக்கச் சுமைக்குத் தோள் கொடுத்தார்

பேச்சு, எழுத்து நீங்கலாக, அன்றாட வாழ்க்கை முறையில் நெறி யாகவும் இனிமையாகவும் வாழ்ந்த குருசாமிக்கு நெஞ்சுவலி நோய்

வருவானேன்? இதைப்பற்றிக் காந்தம்மாவும் நானும் அடிக்கடி

“ஆசா ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/387&oldid=623313" இலிருந்து மீள்விக்கப்பட்டது