பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவேலு 23

‘'நான் மாவட்டக் கல்வி அலுவலராகத் தேர்ந்தெடுக்கப்படுவேன்’ என்று நான் கூறியதும் திரு. டி.எஸ். கல்யாணசுந்தரனார் மகிழ்ச்சிக் கூத்தாடினார்.

‘தம்பி! மாவட்டக் கல்வி அலுவலர் பதவி தொடக்கம்; இயக்குநர் பதவி உன்னுடைய குறிக்கோளாக இருக்கட்டும் ‘ என்று வாழ்த்தி மகிழ்ந்தார்.

மகிழ்ச்சியிலும் மறக்காது, ஆலோசனை ஒன்று கூறினார்.

ஒவ்வொரு மனிதருக்கும் குறையும் உண்டு; நிறையும் உண்டு. அழுக்காறு என்பது எல்லா இனத்தையும் ஆட்டிப் படைக்கும் தீய இயல்பாகும்.

ஆனால் தமிழருக்கோ அதுவே முதலும் முடிவுமான குணம். ‘நம்மோடு போட்டியிடுபவர்கள் பற்றிப் பொறாமைப்பட்டால் அதைப் புரிந்து கொள்ளலாம்.

“எங்கோ, எதிலோ பெரியவராக இருக்கும் தமிழர்கூட, தம்மோடு போட்டி இடாதவரின் வளர்ச்சியைக் கண்டு தாங்கிக் கொள்ளமாட்டார். அழுக்காறு கொள்வார்; அல்லல் படுவார்; அல்ல ல் படுத்தவும் செய்வார்.

‘இதை ஏன் சுட்டிக் காட்டுகிறேன் தெரியுமா? ‘பிரபேசன்’ காலத்தில் தமிழ்நாட்டுப் பகுதியில் வேலை பார்க்காதே!

‘நம் மாகாணத்தின் வேறு மொழி பகுதிக்குப் போய்விடு. ‘எவ்வளவு காலம் வெளியில் இருக்க முடியுமோ அவ்வளவு காலம் பிறகு பகுதிகளில் இருந்துவிட்டு வா.

‘உடன் இருந்து, உழைத்து உதவினால் அரித்து எடுப்பார்கள். ‘எங்கோ இருந்து கொண்டு, தன்னை மட்டும் வளர்த்துக் கொண்டால், உச்சி மேல் வைத்துக் கொண்டாடுவார்கள்.

‘உரிய நேரத்தில் இயக்குநரைக் கேட்டுத் தெலுங்குப் பகுதிக்கோ, கன்னடப் பகுதிக்கோ போய்விடு.

‘நான் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டாயென்று எண்ணி, ஒளிக்காமல் பேசுகிறேன்’ என்றார்.

அக்கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில், பதவி வகித்த, மாவட்டக் கல்வி அலுவலர்கள், தாய்மொழியல்லாத தென்னிந்திய மொழியொன்றைக் கற்றுத் தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/39&oldid=623316" இலிருந்து மீள்விக்கப்பட்டது