பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375 சுந்தரவடிவேலு - ”

அவ் வியக்கத்தின் இடையறாத முன்னணிப் பேச்சும் எழுத்தும் பெரியாருக்கு அடுத்தபடியாக குத்துசி குருசாமி உடையது.

பெரியார் அதில் வெற்றி பெற்றார். பிரதமர் நேரு முன்னின்று அரசியல் சட்டத்திற்கு முதல் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

சமூகம், கல்வி ஆகியவற்றில் பின் தங்கியவர்களுக்கும் கல்வி நிலையங்கள், அரசுப் பதவிகள் ஆகியவற்றில் இட ஒதுக்கீடு செய்யலாம் என்னும் புதிய விதியொன்று சேர்க்கப்பட்டது.

அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம்

அத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபோது, பின்தங்கியவர்கள் என்பதைப் பொருளாதார அடிப்படையில் முடிவு செய்யும்படி உறுப்பினர் ஒருவர் திருத்தம் கொண்டு வந்தார். பிரதமர் நேரு அதை ஏற்கவில்லை. எனவே, முதல் திருத்தம் அப்படியே நிறைவேறியது.

பொது உடைமை இயக்கத்துக்குப் பாதுகாவலர்

இத் திருத்தக் கிளர்ச்சிக்கு முன்னரே பெரியாரும் திராவிடர்கழகமும் வேறு ஒர் இயக்கத்தவரை அடக்குமுறையில் இருந்து விடுவிக்கும் பெரும் போராட்டத்தையும் பொறுப்பையும் துக்கிப் போட்டுக் கொள்ள நேர்ந்தது.

இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற சூட்டோடு, பொது உடைமைக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது.

சேலம், வேலூர், கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்ட பொது உடைமைக் கட்சியினரில் பலர், சுட்டுக் கொல்லப்பட்டார்கள்; அடக்கு

முறை 1951 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.

பொது உடைமைக் கட்சியினரைத் துணிந்து வெளிப்படையாக ஆதரித்து, அவர்களின் கேடயமாகச் செயல்பட்டவர்கள் பெரியாரும் குருசாமியும்; செயல்பட்டது திராவிடர் கழகம்.

குருதி உறையும் துப்பாக்கிச் சூட்டுச் செய்திகள் அடுத்தடுத்து வரும் உடனே ‘குத்துாசி யாரின் பேனா கனலைக் கக்கும்; விரைவாக

அச்சமின்றி அரசின் நிர்வாகத்தைக் கண்டிக்கும்.

நூறு முறை வாழ்க என்று உரத்த குரல் எழுப்பினாலும் அயர்வு தோன்றாது. பத்து முறை ஒழிக” என்று கத்திவிட்டால், பலருக்கு அயர்வு ஏற்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/391&oldid=623318" இலிருந்து மீள்விக்கப்பட்டது