பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 நினைவு அலைகள்

அன்றிரவே சென்னைக்குப் புறப்பட்டோம்: நலமே சென்னை வந்து

அடைந்தோம்.

சென்னை மையப் புகைவண்டி நிலையத்தில் குடும்பத்தினரும்

நண்பர்களும் கூடி வரவேற்றார்கள்.

குழந்தை திருவள்ளுவன் என்னை அடையாளம் கண்டு திகைத்தான்.

பிறகு மின்னலென ஒடித் தாயின் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? அன்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு செனாய் நகர் சென்றோம்.

அண்ணன் குருசாமி உடல் நலம் பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்ந் தோம். ஆறு திங்கள் ஓய்வுக்குப்பின், மீண்டும் சுற்றுலாவைத் தொடங்கிவிட்டார்.

இதற்கிடையில், டாக்டர் உமாபதி முதலியாரிடம் ஓமியோபதி முறை மருத்துவம் பார்த்துக் கொண்டார். அது அவர் உடம்பிற்கு ஏற்றுக் கொண்டது.

என்னை மீண்டும் துணை இயக்குநராகவே நியமித்தார்கள். மனநிறைவோடு பணியில் சேர்ந்தேன்.

கோவைக் கண்காட்சியைத் திறந்து வைத்தேன்

அலுவலக வேலை அதிகமாயிருந்தது. அங்கும் இங்கும் உரையாற்ற அழைத்தார்கள். அத்தோடு இயக்குநர் திரு. சதாசிவ ரெட்டிதான் போக வேண்டிய இடங்கள் இரண்டொன்றிற்கு என்னை அனுப்பி வைத்தார்.

‘தென்னிந்திய ஆசிரியர் கழகம் என்ற ஒர் அமைப்பு பல்லாண்டு களாக ஆசிரியர்கள் நலனைப் பாதுகாப்பதோடு, கல்வி பற்றி ஆழ்ந்து ஆரய்ந்து கருத்து அறிவிக்கும் மையமாக இயங்கி வந்தது.

அது ஆண்டுதோறும் மாநிலக் கல்வி மாநாட்டை நடத்தும். 1951இல் அந்த மாநாடு கோவை நகரில் டைபெற்றது.

சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக விளங்கி, விலகி, ஒய்வு பெற்றிருந்த சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் வரவேற்புக் குழுத் தலைவராக விளங்கினார்.

அவரது அழைப்பின் பேரில், இயக்குநர் ரெட்டியார் மாநாட்டின் கல்விக் கண்காட்சியைத் திறந்துவைக்க ஒப்புக்கொண்டிருந்தார்.

கடைசி நேரத்தில், இயக்குநர் சென்னையில் இருக்கவேண்டிய பெரும் பொறுப்பு ஒன்று வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/394&oldid=623321" இலிருந்து மீள்விக்கப்பட்டது