பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BBO நினைவு அலைகள்

மீண்டும் மாற்று ஆளாகச் சென்றேன். அமைப்பாளர்களும் பொது மக்களும் என்னைப் பரிவோடு நடத்தினார்கள்; நானும் பாசத்தோடு பழகினேன். ஆங்கிலக் கருத்தரங்கு தொடக்கம்

சென்னையில் பிரிட்டிஷ் கெளன்சில், ஆங்கில மொழிக் கருத்தரங்கு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இயக்குநர் திரு. ரெட்டி அதைத் தொடங்குவதாக அறிவித்து இருந்தார்கள்.

தொடக்கத்திற்கு இரண்டு மணி நேரம் இருக்கையில், இயக்குநர் வருகை தலைமைச் செயலகத்தில் தேவைப்பட்டது. திரு. சதாசிவ ரெட்டியாருக்குப் பதில் நான் சென்றேன்; கருத்தரங்கைத் தொடங்கி வைத்தேன்.

‘ஆங்கில மொழி இங்கிலாந்தில் பிறந்தது; ஆனால் அது அவர்களுக்கு மட்டும் உரியதல்ல. முயற்சி எடுத்துக் கற்றுக்கொள்ளும் எவருக்கும், கற்ற மொழி சொந்த மொழியாகிறது. ஆங்கிலத்தின் நிலையும் அதுவே.

‘இன்றைய சூழலில், நிர்வாகத்திற்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்து கிறோம். அயல்நாட்டுப் படிப்பிற்கு அது பெரிதும் உதவுகிறது.

‘எனவே ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது; கற்பதை முறைப்படி கற்றுக் கொள்ளுதல் நல்லது; பேசாமல் பயன்படுத்துங்கள். மொழித் தீண்டாமையை விட்டுவிடுங்கள் இப்படி என் கருத்தரங்கத் தொடக்க உரை அமைந்தது.

தமிழ் வளர்க்கும் மாணவர் மன்றம்

‘மாணவர் மன்றம் என்ற தமிழ்நாடு தழுவிய அமைப்பொன்று பல்லாண்டுகளாக இயங்கி வருகிறது. மயிலை சிவமுத்து, டாக்டர்

தருமாம்பாள், பண்டிதர் எஸ். எஸ். அருணகிரிநாதர் முதலியோர் மன்றத்தின் தொடக்ககால உயிர்நாடிகள்.

தமிழைப் புறக்கணித்து வந்த காலத்தில் மாணவர்களிடையே தமிழ்ப் பற்றையும் தமிழறிவையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, மாணவர் மன்றம் செயல்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் எட்டாம் வகுப்பு மாணாக்கருக்கும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் அரசின் பொதுத் தேர்வுகளுக்கு முன், மன்றம், அதே முறையில் தேர்வுகளை நடத்தி ஒத்திகைப் பயிற்சி கொடுக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/396&oldid=623323" இலிருந்து மீள்விக்கப்பட்டது