பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. l சுந்தரவ டிவேலு - _383

சிறுவர் சிறுமியருக்காகத் தனிநூலகம் தேவை என்று இயக்குநர் உணர்ந்தார்.

வயது வந்தவர்களுக்கான பொது நூலகங்களை, மாவட்ட நூலக ஆணைக் குழுக்களுக்கு விட்டுவிட்டு, பொதுக்கல்வி இயக்கக வளாகத்தில், சிறுவர்க்கான நூலகத்தைத் தொடங்கினார்.

அதன் முதல் நூலகர், செல்வி சம்யுக்தா என்னும் அம்மையார். அவர் நூலகப் படிப்பிலும் பட்டம் பெற்றிருந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மாவட்டக்கல்வி அலுவலர் நிலையிலிருந்த என் இனிய நண்பர் திரு. புல்லையாவைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆந்திர மாநிலம் பிரிந்தபோது, அப் பகுதிக்குச் சென்றார். திரு. புல்லையா, பொதுக்கல்வி இயக்குநராகவும் ஆந்திரப்பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருமுறையும் விளங்கினார். ஆந்திர வங்கியின் இயக்குநர்களில் ஒருவராக இயங்குகிறார். தற்போது ஆந்திரமாநில சாரணர்களின் தலைமை ஆணையராகச் செயல்பட்டு வருகிறார்.

திருமதி. சம்யுக்தா இப்போது ஆந்திர மாநிலச்சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் ஒருவர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர வீட்டு வசதி வாரியத் தலைவராக இருந்து அரும்பணியாற்றி உள்ளார்.

திருமதி. புல்லய்யா சாரணிய இயக்கத்தில் ஊதியம் பெறாது சிறந்த பணி ஆற்றி வருகிறார்.

முதல்வர் குமாரசாமி ராஜாவின் பெருந்தன்மை

சிறுவர் நூலகத்தின் முதல் ஆண்டு விழாவிற்கு அப்போதைய முதல் அமைச்சர் மாண்புமிகு பி.எஸ். குமாரசாமி இராஜா தலைமை காங்கினார்.

முதலமைச்சரின் வருகைக்காக, இயக்குநருக்கு அடுத்து கல்வி அலுவலர்களும் நிலை, பணி, மூப்பு வரிசையில் நின்று கொண்டிருந்தோம்.

உரிய நேரத்தில் வந்திறங்கிய முதலமைச்சரை இயக்குநர் வரவேற்று விட்டு, வரிசையாக நின்றிருந்த மற்ற அலுவலர்களுக்கு அமைதியாக அறிமுகம் செய்து வந்தார்.

மூன்றாம் இடத்தில் நின்றிருந்த என்னை அறிமுகம் செய்கையில், நிரு.பி.எஸ். குமாரசாமி ராஜா, என்னைத் தோளில் தட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/399&oldid=623326" இலிருந்து மீள்விக்கப்பட்டது