பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நினைவு அலைகள்

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

அவ் விதிப்படி, நான் கோவையில் சேர்ந்ததும் என்ன மொழி கற்ற விரும்புகிறாய்? என்று இயக்குநரிடம் இருந்து எனக்குக் கேள்வி வந்தது.

கல்யாணசுந்தரனாரின் அறிவுரை நினைவிற்கு வந்தது; தெலுங்கு படிக்க விரும்புவதாகப் பதில் எழுதினேன்.

உரிய நேரத்தில், தெலுங்கு மாவட்டம் ஒன்றின் கல்வித்துறை அலுவலராக நியமிக்கப்பட்டேன்.

குலாம் த ஸ்த கீர், டி. எஸ். கல்யாணசுந்தரம் பிள்ளை போன்றவர்களே உலகில் இருந்தால், மக்கள் இவ்வளவு துன்பப்பட மாட்டார்களே.

வேறு வகையானவர்களும் உலகில் நிறைய உள்ளனர். இத்தகைய ஒருவரிடம் நான் சிக்க நேர்ந்தது.

மீண்டும் துணை ஆய்வாளர் பயிற்சி

என்னுடைய நான்கு திங்கள் முன் பயிற்சியின்போது என்னென்ன பனிகளில் பயிற்சி பெறவேண்டும் என்று எனக்கு விரிவான ஆணை பிறப்பிக்குமாறு, மண்டலப் பள்ளி ஆய்வாளருக்கு, இயக்குநர் கட்டளையிட்டார்.

அந்த ஆணை, நான் இளநிலை பள்ளி ஆய்வாளராக இருந்ததைச் சுட்டிக்காட்டியது.

இருந்தும் நான் ஆய்வாளர் அலுவலகத்தில் அதே பணியில் ஒரு திங்கள் பயிற்சி பெற வேண்டும் என்று மண்டல ஆய்வாளர் திரு. ஆர்.எம். சவூர் கட்டளையிட்டார்.

அது தேவையில்லை என்று எழுத திரு. குலாம் தஸ்தகீர் விரும்பினார்.

அப்படிச் செய்வதால் என் மீது தப்பெண்ணம் வளருமென்று அஞ்சி, அப்படிச் செய்ய வேண்டாமென்று, நான் வேண்டிக் கொண்டேன்.

கோவை வட்ட ஆய்வாளரோடு ஒரு திங்கள் பல பள்ளிகளுக்குச் சென்றேன்.

புதிதாகக் கற்றுக்கொண்டது. அதிகம் இல்லை. ஆயினும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களோடு இருந்த தொடர்பினை வளர்த்துக்கொள்ள அது உதவிற்று. -

ஆய்வாளர் பயிற்சி முடியும் தருவாயில், குலாம்தஸ்தருேக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்தது. s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/40&oldid=623328" இலிருந்து மீள்விக்கப்பட்டது