பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு

‘பெண்கள் பள்ளி ஆய்வாளர் பதவிக்கு உன் மனைவி L) போட்டார். நான், அலுவலர் பொறுக்குக் குழுவில் இருந்து அவரைப் பேட்டி கண்டேன். அவருக்குப் போர்ப் பணி முன்னுரிமை இருந்தது. அதனால், உன் மனைவியை எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம்.

‘ஒரே குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் உயர்ந்த பதவிகளில் இருப்பது நல்லதா என்ற குழப்பத்தில், உன் மனைவியை எடுக்காமல், வேறொருவரை எடுத்துவிட்டோம். அதைப் பற்றியும் நீ குறைபட வில்லை.

‘உன் நிலையில் வேறொருவர் இருந்தால், இவ்வளவு நெருக்கமான முதலமைச்சர் வாயிலாக மனைவிக்கே அவ் வேலையைப் பெற்றிருப்பார்கள்’ என்று சொல்லி வியந்தார்.

‘தான், தன் குடும்பம் என்ற சிந்தனையில் சுழல விட்டால் பொது மக்கள் நலம் குன்றிவிடும். ஆசைக்கு அளவேது’ என்று கீழ்க்குரலில் கூறியதைக் கண்டு இயக்குநர் மகிழ்ந்தார்.

அவர் என்பால் வைத்து இருந்த நம்பிக்கை வளர்ந்தது.

தியாகராயர் கல்லூரி தொடக்கவிழா

சென்னை வண்ணாரப் பேட்டையில் இயங்கி வரும் சர். தியாகராயர் கல்லூரியின் தொடக்கம், நான் மாநகராட்சிப் பணியில் இருந்தபோது நடந்தது.

அதைத் தொடங்குவதற்கு அச்சாணியாக இயங்கியவர் அன்றைய மாநகர ஆட்சி வடிகால் பொறியர், திரு. இராமசாமி செட்டியார் ஆவார்.

அவர் சர். தியாகராயருக்கு உறவினர். வெள்ளை உள்ளத்தினர். பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

அவருக்குத் துணை நின்ற பலரில் திரு. பார்த்தசாரதி நாயக்கரும், திரு. ஆதிகேசவலு நாயக்கரும் நினைவிற்கு வருகிறார்கள்.

அக் கல்லூரியின் தொடக்க விழாவில், நான் அவையில் வீற்றிருக்க வாய்த்தது. நான் துணை இயக்குநராக இருக்கையில் அக்கல்லூரியின் தமிழ்ப் பேரவை விழாவில் பேசும்படி என்னை அழைத்தார்கள் டாக்டர் பி. சுப்பராயன் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

எங்களை வரவேற்கையில், திரு. ஆதிகேசவலு நாயக்கர் தெ.து.க. எங்கள் செங்கற்பட்டு மாவட்டக்காரர், என்பதால் நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று சொன்னார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/401&oldid=623330" இலிருந்து மீள்விக்கப்பட்டது