பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 நினைவு அலைகள்

டாக்டர் சுப்பராயன் உரையாற்றுகையில் ‘நெ.து. சு. சேலம் மாவட்டத்தின் தத்துப்பிள்ளை. ஆகவே நாங்கள் மகிழ்கிறோம்’ என்று கூறினார்.

‘'நான்தமிழ்நாட்டின் தொண்டன்: இந்தியக் குடிமகன்’ என்று பதில் கூற வேண்டுமென்ற எண்ணம் மின்னிற்று.

ஆனால், பெரியவர்கள் முன் ஊமையாக இருந்துவிட்டேன்.

49. இராசாசியை முதல் அமைச்சர் பதவி தேடி வந்தது

இயக்குநரைத் தேடிவந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார்

1952 ஆம் ஆண்டின் முற்பகுதியில் திரு.டி. சதாசிவ ரெட்டியாரின் ஒய்வு பெறும் நாள் வந்தது.

அதற்கு முன்னர், தமது சகாவாகிய திரு. வி.ஆர். அரங்கநாத முதலியாருக்குத் தற்காலிக இயக்குநர் பதவிக்கு ஏற்பாடு செய்து விட்டு ஒரு திங்கள் சதாசிவ ரெட்டியார் விடுப்பில் சென்றார். பின்னர், அதை மற்றோர் திங்களுக்கு நீடித்தார். திரு. அரங்கநாத முதலியார் இயக்குநராக இருக்கையில், திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் இயக்குநர் அலுவலகம் தேடி வந்து, முன்னவரைப் டிேட்டிக் கண்டார்.

அவருக்குப் பேட்டி கொடுத்தபோது, இயக்குநர் என்னைக் கூப்பிட்டு உடன் வைத்துக்கொண்டார்.

ஆர்.கே. சண்முகம் எது பற்றி வந்தார்? கோவை நகரில், தமது தாயார் ஸ்ரீரங்கம்மாள் பெயரில் ஒரு உயர்நிலைப்பள்ளி தொடங்குவதற்கு ஆலோசனையும் அனுமதியும் கோரி வந்தார்.

கோவை நகருக்கு உயர்நிலைப்பள்ளி தேவைதானா? இதை ஆய்ந்தோம்; ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை பெருகிவரும் கோவை நகருக்கு மேலும் ஒரு உயர்நிலைப் பள்ளி அதிகமில்லை என்ற முடிவுக்கு வந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/402&oldid=623331" இலிருந்து மீள்விக்கப்பட்டது