பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ ’ *!››"! டிவேலு 387

அப்படி அனுமதிப்பதனால், ஒராண்டிற்கு முன்பே, அனுமதி கொடுக்கும்படி சர். சண்முகம் கோரினார்.

அதுவரை அப்படிக் கொடுத்ததில்லை, எனவே, இயக்குநர் ைெகத்தார்.

அனுமதியைப் பெற்றுக்கொண்டு, முழுமையான கட்டடத்தைக் _ட்டி, தளவாடங்களை ஆயத்தம் பண்ணிவிட்டு உயர்நிலைப் பள்ளியைத் தொடங்க இருப்பதாக, ஆர்.கே.எஸ். கூறினார்.

‘என் நீண்ட பணிக் காலத்தில், ‘இப்படி எல்லாவற்றையும் தேடிக் கொண்டு, உயர்நிலைப் பள்ளியைத் தொடங்குபவர், நீங்கள் மட்டுமே ான்று பாராட்டிவிட்டு, உரிய மனுவை உடனே அனுப்புங்கள். ஒர் ஆண்டுத் தவணை கிடைக்கும்படி ஆணை கொடுக்கிறேன். என்று, சர். சண்முகத்துக்கு இயக்குநர் உறுதி கூறினார்.

சர். சண்முகம் உயர்நிலைப் பள்ளிக்குத் தேவையானவற்றை யெல்லாம் தெரிந்து கொண்டு, சென்றார். அதற்கான மனுவை அனுப்பினார். அனுமதியும் உடனே வழங்கப்பட்டது.

ஒராண்டில் உறுதியான கட்டடத்தைக் கட்டி முடித்துவிட்டு மேசை, நாற்காலி, கரும்பலகைகள் ஆகியவற்றைச் சேகரித்துக் கொண்டு, பரீரங்கம்மாள் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கினார்.

அப் பள்ளி, கோவை நகரில் உள்ள நல்ல உயர்நிலைப் பள்ளிகளில் ஒன்றாக இப்போது விளங்குகிறது.

நான், பொதுக்கல்வி இயக்குநரானபின், அந்தப் பள்ளி விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டிற்று.

முதல்வராக சி. சுப்பிரமணியம்

சதாசிவ ரெட்டியார் ஒய்வு பெறும் வயதை நெருங்கினார். சென்னை மாகாண ஆட்சியில் மாறுதல் ஏற்பட்டது.

1952 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி, நூறு இடங்கள்போல் பிடித்தது.

கம்யூனிஸ்ட் கட்சி அறுபத்திரண்டு இடங்களையும், எக்கட்சியிலும் சேராத சுயேச்சையாளர்கள், அறுபத்திரண்டு இடங்களையும் வேறு சில சில்லறைக் கட்சிகள் சில இடங்களையும் பிடித்தன.

மொத்தத்தில் சிறுபான்மையாக இருப்பினும், காங்கிரசு கட்சி பெற்ற அளவு இடங்களை வேறு கட்சி எதுவும் பெறாமையால், அமைச்சரவை அமைக்கும் வாய்ப்பு காங்கிரசுக்கு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/403&oldid=623332" இலிருந்து மீள்விக்கப்பட்டது