பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 நினைவு அலைகள்

அந்த ஆனையை என்னிடம் காட்டினார்;. நான் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தேன்.

‘போவதா? வேண்டாமா? என்று இனிதான் முடிவு செய்ய வேண்டும்.

‘என்னிடம் நம்பிக்கை வைத்து, எனக்குப் பதவி நீடிப்புத் தந்த முதலமைச்சர் இராசாசியிடம் ஆணையைக் காட்டப்போகிறேன். அவர் போகச் சொன்னால் போகிறேன். இருக்கச் சொன்னால் இருந்து விடுகிறேன். இச் செய்தி உன் உள்ளத்திலேயே இருக்கட்டும்’ என்று. ரெட்டியார் கூறினார்.

இராசாசி அறிவுரை

முதலமைச்சரைத் தேடிச்சென்ற அவருக்கு எளிதில் பேட்டி

கிடைத்தது.

இயக்குநர் பாரிசிலிருந்து வந்துள்ள ஆணையைக் காட்டினார். இராசாசி என்ன சொன்னார்,

‘உலக நிறுவனத்தின் நியமனம். இது உங்களுக்கும் பெருமை, நாட்டிற்கும் பெருமை. இந்தப் பதவிக்காலம், நான் கொடுத்த நீடிப்பை விட அதிகம். ஆகவே தயங்காது ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று. இராசாசி கோடு காட்டினார்.

திரு. சதாசிவ ரெட்டியார் முறைப்படி அரசுக்கு எழுதி, தம்மை விடுவித்து அனுப்பும்படி கேட்டுக் கொண்டார்.

தவறான ஆலோசனை

இரண்டொரு நாள்களில் இச்செய்தி பரவிற்று. பலரும் ஆலோசனை கூறத் தலைப்பட்டார்கள்.

  • ‘இப்போதைக்குக் கல்வித்துறையைச் சேர்ந்த எவரையும் இயக்கு நராக நியமிக்க வேண்டாம் இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த ஒரு வரை நியமித்துவிடுங்கள் என்று அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளேன்’ என்றார் ஒரு பெரியவர்.

இப்படி என்னிடம் நேருக்கு நேராகக் கூறியவர் எவர்? திரு. வி.ஆர். அரங்கநாத முதலியார். அவர் கல்வித்துறைக்குத் தீங்கையும் செய்துவிட்டு, என்னிடம் கூறி, என்னையும் இழிவு படுத்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/406&oldid=623335" இலிருந்து மீள்விக்கப்பட்டது