பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரு து. சுந்தரவடிவேலு - 393

அனைத்திந்தியக் கல்வி ஆணையம்

அந்தக் காலக்கட்டத்தில், டாக்டர். ஆ. இலட்சுமணசாமி முதலியார் தலைமையில், அனைத்து இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி ஆணையம் ஒன்று இந்திய அரசால் நியமிக்கப்பட்டது.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியக் கல்வியாளர்களோடு, முர் ஆங்கிலேய, ஒர் அமெரிக்கக் கல்வியாளரும் அதில் இடம் பெற்றனர்.

அக் குழுவிற்கு இடப்பட்ட கட்டளை என்ன?

இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் செல்லவேண்டும். கல்வி முறைகளைக் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். கல்வி நிலையங் களைக் கண்டுவரவேண்டும்.

பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிலைகளை ஆய்ந்த பின், |தியா முழுமைக்கும் காலத்திற்கேற்ற ஒரே சீரான கல்வித் திட்டத்தை உருவாக்கித் தரல் வேண்டும்.

இக் கல்வி ஆணையம், கல்லூரி முதல்வர்கள் போன்ற பல நிலைக் கல்வியாளர்களைப் பேட்டி கண்டு, கருத்தறிதல் முதல் கடமையாகும்.

இலட்சுமணசாமி முதலியார் ஆணையம், ஒவ்வோர் மாநிலத்திற்கும் செல்லுகையில், அந்தந்த மாநில அரசு, தொடர்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். அவர் அந்த ஆணையத்தின் விருப்பப்படி பயணத்திற்கும் பேட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யவேண்டும். -

அப்போது இருந்தது தமிழ்நாடு அல்ல; சென்னை மாகாணமே.

அப்பெரும் நிலப்பரப்பிற்குத் தொடர்பு அலுவலனாக நான் நியமிக்கப்பட்டேன்.

அவ் வேலைக்கென்று தனியாக என்னை ஒதுக்கிவிடவில்லை. துணை இயக்குநர் வேலையையும் பார்த்துக்கொண்டு, தொடர்பு அலுவலராகவும் செயல்பட நேர்ந்தது.

கூடுதல் சுமை பற்றி நான் குறைபடவோ, முணுமுணுக்கவோ பங்லை.

பல அறிஞர்களின் கருத்துகளைக் கேட்கும் வாய்ப்புகள் வப்போவதை எண்ணி மகிழ்ந்தேன்.

ஆணையத்தின் தலைவர் டாக்டர் ஆ. இலட்சுமணசாமி பகலியாரை அடிக்கடி கண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/409&oldid=623338" இலிருந்து மீள்விக்கப்பட்டது