பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 நினைவு அலைகள்

அவர்கருத்துப்படி சென்னை, உதகை, விசாகப்பட்டினம், கோவை, மதுரை ஆகிய நகரங்களில் கல்வியாளர்களையும் பெற்றோர்களையும், ஆசிரியக் கழகப் பேராளர்களையும் கண்டு கலந்துரையாடவும், கல்வி நிலையங்களைப் பார்வையிடவும் திட்டம் தீட்டினேன்.

ஒரு சுற்றுலா வாரியம் செய்யவேண்டிய பணிகளையெல்லாம் செய்ய நேர்ந்தது. அப் பட்டறிவு, அப்போது சுமையாக இருப்பினும், பிற்காலத்தில் எனக்குப் பயன்பட்டது.

ஆணையம் ஒரு நகருக்கு வந்து சேருவதற்கு முன்னதாகவே நான் அந்நகருக்குச் சென்று முன்னேற்பாடுகள் செய்வேன். விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப் போட்டியிட்டோர் பலராவர்.

எல்லோரிடமும் பணிவாகப் பேசி, முரண் ஏற்படாமல் நிகழ்ச்சிகளை நிரல்படுத்தினேன்.

ஒவ்வொரு நிகழ்ச்சியையும் உரிய நேரத்தில் முடிக்க வேண்டுமே? ஏதாவது ஒன்று தாமதமாகிவிட்டால், அடுத்தவை தாமதமாகுமே! அத்தகைய நிலையை நீக்குவது எப்படி?

“பழி ஏற்றுக் கொண்டேன்

இதைப் பற்றி டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் அதிகம் கவலைப்பட்டார். நீண்ட உரையாடலுக்குப்பின்.

‘'நீ பழியேற்றுக்கொள்ள முடியுமா? ஒரு துதுக்குழுவைப் பேட்டி கண்டு பேசிக்கொண்டிருக்கையில், அதற்குரிய நேரம் முடியும் தருவாயில், நீ உள்ளே நுழைந்து, என்னிடம் நேரம் முடியப்போகிறது என்று காதோடு உரை. நான், வாய் பேசாமல், முகத்தால் வெகுள்வது போல் நடிப்பேன். நீ மனம் புண்படாமல் விலகிக்கொள். ஆனால், நான், நீ நினைவுபடுத்தியதைச் சொல்லி, பேட்டியில் இருப்பவர்களை அனுப்பிவிட்டு, அடுத்ததைக் கவனிக்க உதவுகிறேன்’ என்றார்.

பழியை ஏற்கமாட்டேன் என்று சொல்லமுடியுமா? ஒப்புக் கொண்டேன்.

கல்வி ஆணையத்தின் சென்னை மாகாணப் பயணம் எவ்வித இடையூறும் இன்றிச் செம்மையாக நடந்தது.

அது பல தரக்கல்வி நிலையங்களைக் காண முடிந்தது.

கல்லூரி முதல்வர்கள் உட்படப் பல ஆசிரியக் கழகத்தாரோடு கலந்து உரையாட முடிந்தது.

புலப்பட்டது என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/410&oldid=623340" இலிருந்து மீள்விக்கப்பட்டது