பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 399

அவன் காரின் மேல் வீழ்ந்தான்.

காரோட்டி எதிராசு, வாரி அணைத்தார்; மடியில் இருத்தி, குழந்தையோடு பேச்சுக்கொடுக்க முயன்று கொண்டு இருந்தார்.

குழந்தை அதிர்ச்சியடைந்திருந்தான்.

“எங்கே, கண்ணு வலிக்கிறது? என்று கேட்டபடியே, திருவள்ளுவன் உடலைத் தடவிப் பார்த்தார். அவன் தாயார் காந்தம்மாள்.

எப்படித்தான் பறந்து சென்றார்களோ!

டாக்டரின் பரிவு

என் அலுவலக எழுத்தாளர்களில் இருவர், நுங்கம்பாக்கத்தில், குடியிருந்த டாக்டர் ஒருவரை அழைத்து வந்தனர்.

அவர் அரசு ஊழியத்தில் சேராது; தனியாக மருத்துவத் தொழில் நடத்தி வந்தார்.

அவரே, காரோட்டிக் கொண்டு, விரைவாக வந்துசேர்ந்தார். அவர் நொடியும் வீணாக்காது, திருவள்ளுவனைச் சோதித்துப் பார்த்தார்.

‘நல்லவேளை, கைத்தாங்கலாகத் தாங்குவதுபோல் பந்தல் தாங்கிவிட்டுக் காப்பாற்றியுள்ளது; வெளிக்காயமில்லை; உட்காயம் இல்லாதபடி ஆண்டவன் காப்பாற்றி இருப்பார் என்று நம்புகிறேன்’ என்று தேற்றியபடியே திருவள்ளுவனைத் தம் காரின் பின் இடத்தில் படுக்க வைத்தார்.

தாமே ஒட்டிக்கொண்டு, சென்னை, பொது மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அக்காரில் நான் தொத்திக் கொண்டேன்.

டாக்டர், பொது மருத்துவமனையில் பலருக்கும் தெரிந்தவர்; நிர்வாக நுணுக்கங்களும் அறிந்தவர்.

எனவே, விரைந்து திருவள்ளுவனைச் சோதிக்க வைத்தார்.

‘வெளிக்காயம் இல்லை; உட்காயம் உண்டா, என்று முழுமையாக ஆய்ந்து பார்க்க வேண்டும்’ என்று கூறி, திருவள்ளுவனை மருத்துவ மனையில் சேர்த்துக்கொண்டார்கள்.

பொதுப்பிரிவில், பலவகையான நோயாளிகளுக்கு இடையில் நிருவள்ளுவனுக்கு இடம் கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/415&oldid=623345" இலிருந்து மீள்விக்கப்பட்டது