பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 நினைவு அலைக

அதனால், புது நோய் எதுவும் ஒட்டிக் கொள்ளக்கூடாதே என்பது எங்கள் டாக்டரின் கவலை.

எனவே, மருத்துவ மனையிலேயே வாழும் மருத்துவ அலுவலரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்; பலிக்கவில்லை.

மறுநாள், தனிப் பிரிவில் இடம் காலி ஆயிற்று. அதுவும் திருவள்ளு வனுக்கு ஒதுக்கப்படவில்லை.

நாள் தோறும் கடுமையான நோய்களோடும் போராடிப் போராடி, உறுதி பெற்றுவிட்ட மருத்துவர்கள், பொது மக்களோடு பழகும்போது நெளிவு சுளிவு இல்லாமல் நடக்கும் இயல்பைப் பெற்றுவிடுகிறார்கள் போலும்.

திருவள்ளுவன், சில நாள்கள், மருத்துவ மனையில் இருந்தான். காந்தம்மா கவலையோடு பெரும்பாலும் உடன் இருந்தார்.

எவ்விதப் பின் விளைவும் காணவில்லை. அதிர்ச்சி நீங்கிவிட்டது. முழுநலம் பெற்றுவிட்டான். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய் விட்டது’ என்று பூரித்தோம்.

ஈடுகொடுக்க முடியாத பெரும் வேதனைக் குண்டைப் பிற்காலத்தில் எங்கள்மேல் போடவே அப்போது உயிர் தப்பினான் என்று எண்ணவில்லை.

தலைக்கு வந்த தீங்கின்போது திருவள்ளுவனுக்கு முதல் உதவி செய்த அந்த டாக்டரின் பெயர் என்ன? சாரங்கபாணி அய்யங்காரா, சக்ரபாணி அய்யங்காரா என்று தடுமாறுகிறேன்.

என் ஒரே மைந்தனின் உயிரைக் காப்பாற்றிய நல்லவர் பெயரை உறுதியாகச் சொல்லும்படி குறித்து வைத்துக்கொள்ளத் தவறி விட்டதற்கு வேதனையும் வெட்கமும் படுகிறேன்.

மருத்துவர் பெயரை மறந்தேன்

எனது வரலாற்றை எழுதும் நிலை வருமென்று நான் எதிர்பார்க்க வில்லை. இளைஞர்களே நீங்களாவது, வரும்முன் ஆயத்தம் செய்து கொள்ளுங்கள்.

நாட்குறிப்பு எழுதாவிட்டாலும் குறைந்த அளவு, ஒரு பெரிய பதிவேட்டில், அவ்வப்போது கிடைக்கும் உதவிகளையும் உதவியவர் களையும் குறித்துக்கொண்டு வாருங்கள்.

திருவள்ளுவன் மருத்துவமனையிலிருந்து நலமே வீடு திரும்பிய பிறகு, நுங்கம்பாக்கம் டாக்டரைத் தேடிச் சென்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/416&oldid=623346" இலிருந்து மீள்விக்கப்பட்டது