பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4O2 நினைவு அலைகள்

அவ்வளவு பெரியவர்களின் திறமை எங்கள் வாழ்நாளை நீடிக்கின்றன.

அவர்கள் எங்களிடம் கட்டணம் கேட்டிருந்தால், அதைக் கொடுக்க முடியாது முறிந்திருப்போம். நாங்கள் இருவரும் இவர்களுக்கு நன்றி யுடையோம்.

திரும்பிப்பாராத, எவர் எவருக்கோ செய்த உதவி, மேற்கூறிய மருத்துவர்கள் வாயிலாகத் திரும்பி வருகிறது; எங்கள் உயிர்காத்தலாகத் திரும்பி வருகிறது. பூரிக்கக் காரணம் உண்டு அல்லவா?

சில அலறுவதுபோல், உலகம் முழுவதும் கெட்டுவிடவில்லை’ என்று நம்பிக்கை கொள்ளச் சரியான நியாயமும் உண்டு அல்லவா?

எதிரும் புதிருமான நிலைகள், உணர்ச்சிகள் ஒரே நேரத்தில் ஒருவனைச் சுற்றிச் சுற்றித் தாக்குவது போன்ற வேதனை வேறொன்றும் இல்லை.

ஆடும் குதிரை

திருவள்ளுவனை மருத்துவ மனையில் சேர்த்துவிட்டுப் பெரும் கவலையோடு, இருட்டிய பிறகு வீடு திரும்பிய நான் கண்டது என்ன? குழந்தைகள் ஏறி உட்கார்ந்து ஆடும், மரத்தால் செய்யப்பட்ட குதிரை ஒன்று இருக்கக் கண்டேன்.

‘எவரோ ஒரு வெள்ளைக்கார அய்யாவும் அம்மாவும் கொண்டு வந்து வைத்தார்கள். அதோடு இக் கடிதத்தையும் கொடுத்தார்கள் என்று என் அடிப்படை ஊழியர் கூறினார்.

கடிதம் எவர் எழுதியது? அமெரிக்கக் கல்வியாளர் ஹார்ட்டி எழுதியது. அத் தம்பதிகள் அந்தக் குதிரையைத் திருவள்ளுவனுக்கு அன்பளிப்பாக ஏற்றுக் கொள்ளும்படி கடிதத்தில் அன்புடன் கோரி இருந்தார்கள்.

காலையில் அவர்களுக்குச் சில கல்வி நிலையங்களைக் காட்ட அழைத்துக்கொண்டு சென்றபோது, அவர்கள் எனது குடும்பம் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். தற்செயலாகத் திருவள்ளுவனையும் கண்டார்கள்.

ஏற்பதா? மறுப்பதா? காலை ஆறு மணிக்கு விமானத்தில் புறப்பட இருக்கும் அவர்களிடம் அதை எப்படித் திருப்பிக் கொடுப்பது? இப்படிக் குழம்பினேன்.

அடுத்த வினாடி அச்சம் ஊட்டும் கருத்து மின்னிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/418&oldid=623348" இலிருந்து மீள்விக்கப்பட்டது