பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற து. சுந்தரவடிவேலு 403

மளர் வாயை மூட, உலை மூடி இல்லை. எனது ஊழியர், ‘வெள்ளைக்காரர்’ கொடுத்த அப் பரிசைப் பற்றி நான்கு பேர்களோடு பேசக்கூடுமே!

அப்புறம் அவரும் இவரும் இப்படிப் பரிசுகளைக் கொண்டு வந்து, வைக்கத் தொடங்கிவிட்டால்?

பழிக்கும் குற்றத்திற்கும் ஆளாக நேர்ந்துவிடுமே! இக் கருத்து மின்னியதும், நான் துருவாசன் ஆனேன்.

‘எவரும் எப்போதும் எதையும் என் பங்களாவிற்குக் கொண்டு வைத்துவிட்டுப் போகவிடாதே. நாங்கள் இருக்கிறபோது வந்தால், நாங்களே விரட்டி விடுவோம்; இல்லாதபோது வந்தால், நீ திருப்பி அனுப்பிவிடு. மறுபடியும் இதுபோல் தவறு நேர்ந்தால், உன்னைத் தொலைத்துவிடுவேன்’ என்றேன்.

ஊழியர் என்ன செய்வார்? ஊமையாக இருந்துவிட்டார்.

அனைத்திந்திய கல்வி மாநாடு

1952 ஆம் ஆண்டின் இறுதியில் பம்பாய் மாநகரில் அனைத்து இந்தியத் தொடக்கக் கல்வி மாநாடு ஒன்றை இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது.

அம் மாநாட்டிற்குச் சென்னை மாகாணத்தின் கல்வி அமைச்சராக விளங்கிய டாக்டர் எம். வி. கிருஷ்ணராவ் சென்றிருந்தார்; பத்து நாள்களும் பங்குகொண்டார்.

அம் மாநாட்டிற்கு, அப்பொழுது தொடக்கக்கல்வியின் துணை இயக்குநராக இருந்த என்னையும் அவருடன் அனுப்பி வைத்தார்கள்.

பம்பாயில் இரயில்வே மருத்துவராக இருந்த, டாக்டர் சூரிய நாராயணரோடு பத்து நாள்கள் தங்கினேன். அவருடைய விருந்தோம் பலுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளால் இயலாது.

அந்த மாநாட்டில், இந்தியக் கல்வி அமைச்சகத்தில் கூடுதல் ஆலோசகராக விளங்கிய சயதீன், பம்பாய் மாகாண பொதுக்கல்வி இயக்குநர் டாக்டர் பவதே, இந்தியக் கல்வி முன்னோடிகளில் ஒருவரான திரு. ஜே.பி. நாயக் ஆகியவர்களை முதலில் பார்க்கிறேன்.

திரு. ஜே.பி. நாயக் கோலாப்பூர் பகுதியில் காந்தியச் சார்புடைய ‘கிராமிய ‘க் கல்வி முறையைத் தம் முயற்சியால் செயல்படுத்திக் கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/419&oldid=623349" இலிருந்து மீள்விக்கப்பட்டது