பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 நினைவு அலைகள்

எல்லோர்க்கும் கல்வி, தரமான கல்வி, பயனுள்ள கல்வி கொடுப்பதில் நம் நாடு, நம் காலத்திலேயே வெற்றி பெறும் என்னும் முழு நம்பிக்கையோடும், அதனால் பொங்கிய ஆர்வத்தோடும் நாயக் இயங்கி வந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர், இந்திய அரசின் தொடக்கக் கல்வி ஆலோசகரானார்; பல்லாண்டு ஆலோசகராகச் செயல்பட்டார்.

நேரு ஆட்சி முதல், லால்பகதூர் ஆட்சி, திருமதி இந்திரா காந்தி ஆட்சி, மொரார்ஜி ஆட்சி ஆகியவற்றிற்கெல்லாம் ஆலோசகராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றார்.

பிறகு பூனே இந்தியன் கல்வி நிலையம் என்ற அமைப்பை உருவாக்கினார். -

அக் கழகத்தின் ஆயுள் உறுப்பினர்களில் நானும் ஒருவன்.

திரு நாயக் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்; சில ஆண்டுகளுக்கு முன்பு, எண்ணற்ற நண்பர்களை ஏங்க விட்டு மறைந்தார்.

51. இராசாசியின் தொடக்கக் கல்வித் திட்டம்

பவதே அறிமுகமானார்

பம்பாயில் நடந்த அனைத்திந்திய தொடக்கக் கல்வி மாநாட்டில் பம்பாய் மாகாணப் பொதுக் கல்வி இயக்குனர் திரு பவதே என்னும் அறிஞருக்கு அறிமுகமானேன்.

மாநாட்டு நாள்களில் சிலமுறை அவரோடு உரையாடினேன்.

அவர் அப் பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பின், கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகத் துணை வேந்தரானார்.

துணைவேந்தராக இருக்கையில் அவரது மணிவிழா வந்தது.

பாராட்டத்தெரிந்த மராட்டியர்கள், ஒரு இலட்சம் ரூபாய் திரட்டி மணிவிழா நினைவாக அப் பல்கலைக்கழகத்திற்கு அளித்தார்கள்.

அவ் விழாவிற்கு டாக்டர் வாழ்த்துக் கூறி, நிதியளிப்பைச் செய்து மகிழ்வித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/420&oldid=623351" இலிருந்து மீள்விக்கப்பட்டது