பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடது. சுந்தாவடிவேலு 405

டாக்டர் பவதே அவர்களைச் சில முறை கல்வி மாநாடுகளில் இந்தியாவில் கண்டு மகிழ்ந்தேன்.

ஒரு முறை சோவியத் நாட்டுப் பயணத்தில் 1971 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் கண்டேன்.

இருவரும் ஒரே ஒட்டலில் தங்கியிருந்தோம்.

அதற்கப்புறம் டாக்டர் பவதே பஞ்சாப் மாநில ஆளுநர் ஆனார்.

வெள்ளையர் பள்ளிகள்

நீலகிரி மலையில், “லவ் டேல்’ என்ற இடத்தில், புனித லாரன்ஸ் உயர்நிலைப் பள்ளி என்ற பெயரில் ஒர் உறையுள் பள்ளி நடந்து வருகிறது.

அதே பெயரில் சிம்லா மலையில் ஒர் உயர்நிலைப் பள்ளி நடக்கிறது.

இரண்டு பள்ளிகளும் வெள்ளைக்காரர்கள் நிறுவியவை. ஆட்சி அணியைச் சேர்ந்த ஆங்கிலேயரும் படையணியைச் சேர்ந்த வெள்ளையரும் தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக, இப்படிச் சில பள்ளிகளை நிறுவிக் கொண்டார்கள்.

அதற்குப் போதுமான சொத்தை அறக்கட்டளையாக்கி வைத்தார்கள்.

மேற்கூறிய இரு பள்ளிகளுக்கும் தனித்தனி அறக்கட்டளை உண்டு. இரண்டும் இந்திய அரசின் கல்விஅமைச்சகத்தின் மேற்பார்வையில் தன்னாட்சி பெற்ற ஆட்சிக் குழுக்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

நம்நாடு அரசியல் விடுதலை பெற்றபிறகு மேற்கூறிய பள்ளிகளில் படிக்கக்கூடிய வெள்ளையர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது.

அதோடு நம்மவரைச் சேர்க்காது வெள்ளையர் மட்டும் படிக்கும் பள்ளிகள் இந்தியாவின் மானத்திற்கு அறை கூவல் அல்லவா?

அதே நேரத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஆங்கிலோ இந்தியக் கல்வி நிலையங்களுக்குப் பழைய நிலையில் நிதிப் பாதுகாப்பு அளிக்கும் விதி சேர்க்கப்பட்டது.

எனவே, இந்திய மாணவர்களையும் அத்தகைய பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்னும் ஆணை மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/421&oldid=623352" இலிருந்து மீள்விக்கப்பட்டது