பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4OB நினைவு அலைகள்

குடிசை வாழ் சிறுமியின் மதி நுட்பம்

அறிவும் அமைதியும் சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் ஒளிவிடும் கண்களோடு, பத்து வயது சிறுமியொருத்தி, நேர்முகத் தேர்வுக்கு எங்கள் முன் உற்சாகத்துடன் வந்தாள்.

எழுத்துத் தேர்வில் நிறைய மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடத்தைப் பெற்று இருந்தாள்.

நேர்முகப் பேட்டியில், நிதானப்படுத்தும் பொருட்டு, பெயர், ஊர் முதலிய எளிய கேள்விகளைக் கேட்டோம்; பதற்றமின்றித், தெளிவாகவும் திடமாகவும் பதில் அளித்தாள்.

‘பாட்டிகளிடம் கதை கேட்டிருக்கிறாயா?”

‘ஆம்’ என்றாள்.

‘'சாவித்திரி என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?”

‘தெரியும் ‘ என்பது சிறுமியின் பதில்.

‘என்ன தெரியும், சொல். ‘

‘'சாவித்திரி நல்ல நடிகை. சமீபத்தில்... என்ற படத்தில் நடித்திருக் கிறார். இப்போது அது பல கொட்டகைகளில் ஒடிக் கொண்டிருக்கிறது.’

‘அந்தப் படத்தை நீ பார்த்தாயா? ‘

‘இல்லிங்க கஞ்சிக்கே கஷ்டம்: படம் பார்க்க எனக்குக் காசு ஏதுங்க?”

‘அப்படியானால், இன்ன படத்தில் நடித்திருக்கிறார் என்று உனக்கு எவர் சொன்னது?”

‘'நான் பள்ளிக்குப்போகும் வழியில், குறுக்குச் சாலை. தேtைர்க் கடையில் தட்டியில் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள், அதைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்’ என்றாள்.

அவள் குடியிருக்கும் ஊரும், படிக்கும் ஊரும் காரமடைக்கு அப்பால் மலைக்குப் போகும் வழியில் இருந்தன.

அவள் குறிப்பிட்ட சந்திப்பு எனக்குத் தெரியும்.

கோவை மாவட்டத்தில் பயிற்சி பெறும் கல்வி அலுவலராகப்

பெற்ற பட்டறிவைக்கொண்டு, அந்தப் பகுதி பற்றிச் சில கேள்விகள் கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/424&oldid=623355" இலிருந்து மீள்விக்கப்பட்டது