பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 409

-

அத்தனைக்கும் சரியான பதில் கூறினாள். தேர்வு பெற்றாள்.

அதோடு முடியவில்லை விவகாரம்.

‘அவள் குடிசையில் வாழ்பவள்.

‘அவளைச் சேர்த்துக்கொண்டால், வறியவள் என்பதால் செலவுக்கு உதவித்தொகை கிடைக்கும்.

‘அதைக் கொண்டு, செல்வர் வீட்டுப் பிள்ளைகளுக்குச் சமமாக இருந்துவிட்டுக் கோடை விடுமுறைக்கு வீட்டிற்குப் போனால், மீண்டும் தன் குடிசையில் இருக்க ஒப்புவாளா? ‘’

இக் கேள்வியை ஒருவர் கிளப்பினார்.

இதற்குப் பதில் எது?

‘நம்முடைய வேலை தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்தல். பிற விளைவுகளுக்கு நாம் பொறுப்பாளியல்ல என்று சொல்லி நழுவி விட்டோம்.

கலக்கம் ஊட்டிய கடிதம்

நான் அலுவல் பற்றி வெளியூர் சென்று, இரண்டொரு நாள் தங்க நேர்ந்தால், அலுவலகத்திலிருந்து நாள்தோறும் கடிதங்களையும் உடனே கவனிக்க வேண்டிய கோப்புகளையும் அனுப்பி வைக்கத் தொடர்ந்து ஏற்பாடு செய்வது என் வழக்கம்.

கடிதங்களைப் பார்க்காவிட்டால் எனக்குத் துக்கம் வராது.

இம்முறை கடிதமொன்றைப் பார்த்ததால் என்னுடைய துக்கம் தொலைந்து பசியும் கெட்டது.

அப்படி வந்த கடிதம் மொட்டைக் கடிதமா? இல்லை.

அவதுறா?

இல்லை.

மிரட்டலா? அதுவும் இல்லை.

பின் என்ன?

எனது தலைவர், பொதுக்கல்வி இயக்குநர் திரு கோவிந்தராசுலு நாயுடு, ‘உடனடிக் கவனத்திற்கு ‘ என்று, இரகசியக் குறிப்பு ஒன்றை உறையில் அனுப்பியிருந்தார்.

நீளமான அக் குறிப்பைப் படித்தேன். அதிர்ச்சி கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/425&oldid=623356" இலிருந்து மீள்விக்கப்பட்டது