பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 41 |

‘வயிற்றுப் பிழைப்பிற்காக மக்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட என் மனம் ஒப்பவில்லை.

‘பதவி வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது’ இப்படி அவரிடம் அங்கலாய்த்தேன்.

பிள்ளை என்ன பதில் சொன்னார்?

‘நகரத்துப் பிள்ளைகளை வசதிகள் அதிகம் கொண்ட பள்ளிகளில், முழு நேரம் படிக்க விட்டுவிட்டு, ஊமைகளான நாட்டுப்புற மக்களை அரை நாள் படித்தால்போதும் என்பது பெரிய அநீதி: தடுத்து நிறுத்த வேண்டிய கொடுமை; அதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

‘'தடுத்து நிறுத்துவது யார் என்பதே கேள்வி? அலுவலர்கள் தடுத்து நிறுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதா? அல்லது காற்றடித்த பக்கம் பறப்பதா?

‘ஆட்சியில் இருகூறு செயல்கள் உள்ளன. அன்றாட நிர்வாகம் ஒன்று. அந்த நடிவடிக்கைகளில் அநீதி, தீங்கு, கொடுமை துழையாதபடி தடுக்கும் பொறுப்பு பெரிதும் அலுவலர்களைச் சார்ந்தது. இது நிர்வாகத்தின்பாற் பட்டது எனலாம்.

‘ஆட்சி என்பது நிர்வாகத்திற்கும் மேற்பட்டது. சில கொள்கை களையும் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு நடப்பது.

‘அத்தகைய கொள்கைகளை முடிவு செய்யும் உரிமை அலுவலர் களுடையது அல்ல.

‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுடையது ஆகும்.

‘அவ் வுரிமையைப் பயன்படுத்தித் தவறான கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த முயல் கையில், அலுவலர், கைகட்டி, வாய் பொத்தி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதானா? இல்லை.

‘குறிப்பிட்ட கொள்கையோ, திட்டமோ, பொது நலனுக்குக் கேடானதென்று அலுவலருக்குத் தோன்றினால், அவருக்கு மனச்சாட்சி இருந்தால், அவர் அத் திட்டம் இன்னின்ன வகையில் பொது மக்களுக்குக் கேடாக முடியும் என்று விவரமாக அதே நேரத்தில் சொற்களை அளந்துவைத்து-எழுத்து வழித் தெரிவிக்க வேண்டும். ‘

‘அறுவை மருத்துவம் பார்க்கும் இடத்தில், நோய் மாற்றும் மருந்தைத் தடவுவதைப் போன்று, மாற்றுக் குறிப்பு எழுதுகையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/427&oldid=623358" இலிருந்து மீள்விக்கப்பட்டது