பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 நினைவு அலைகள்

படிப்போர் மனம் புண்படாதிருக்கும் வகையில் சில பணிவான சொற்றொடர்களைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

‘நீங்கள் கீழ்மட்ட அலுவலராக இருந்து வாய் மூடிக்கிடந்தால், உங்கள்மேல் பழிவராது.

‘இயக்குநருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உங்களிடம் சுய சிந்தனையையும் சொந்தக் கருத்தையும் மேலிடத்தில் எதிர்பார்ப்பதே

முறை.

‘ஆகவே, சிறிதும் ஒளிக்காமல், அரைவேளைப் படிப்பில் உள்ள குற்றங்களை விவரமாக எழுதிக் கொடுத்து விடுங்கள்.

‘அப்புறம் அரசுக்கு இயக்குநர் எந்த ஆலோசனையாவது கூறட்டும்.

‘அரசு அப்படியே அரைவேளைப் படிப்பை நடைமுறைப்படுத் தினால், பொதுமக்களோ, அவர்கள் சார்பில் பொது வாழ்க்கைப் பெரியவர்களோ முன்வந்து போராடட்டும்.

‘பேரறிவு படைத்த ராஜாஜிக்கு ஏனோ இப்படியொரு எண்ணம் முளைத்துவிட்டது. இது அவருக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்லதல்ல.

‘உங்கள் வேலையோ, நேரக்கூடிய குறைகளை ஒளிக்காமல் சொல்லி விடுவதே. அப்படிச் சொல்கையில் சொற்களை மட்டும் அளந்து போடுங்கள்’ என்று வழிகாட்டினார்.

திரு சின்னையா பிள்ளை இராசாசியிடம் பற்றுடையவர் என்பதை இங்கே குறிப்பிடுவது என் கடமை ஆகும்.

என் மனத்தில் இருந்த பெரும் பாரம் இறங்கிவிட்டது.

அலுவலர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக மாறிவிடக் கூடாதென்ற தெளிவோடு அலுவலகம் சென்றேன்.

பழைய திட்டமே

பொதுக்கல்வி இயக்ககத்தில் தொடக்கக் கல்வித் திட்டம் பற்றிய அலுவல் பார்த்த மேற்பார்வையாளர் திரு கிருஷ்ணசாமி அய்யங்கார்.

அவர் பி.ஏ. எல்.டி. பட்டங்கள் பெற்றவர்; அந்த அலுலகத்தில் நீண்ட காலம் பணிபுரிந்தவர்.

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான திறமைசாலி; நேர்மையிலும் அப்படியே நினைவு ஆற்றல் மிக்கவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/428&oldid=623359" இலிருந்து மீள்விக்கப்பட்டது