பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 415

அவ் வட்டத் தொடக்கப் பள்ளிகள் அரைவேளை மட்டுமே செயல் பட்டன. வருகை அதிகரிக்கவில்லை; குறைந்து விட்டது. ஒராண்டின் இறுதியில் அதை அரசுக்குத் தெரிவித்தார். செய்து கொண்டிருந்த சோதனை நீக்கப்பட்டது.

பழையபடி எல்லாப் பள்ளிகளும் முழு நாள் வேலை செய்தன.

கிைப்டு முறைப் பள்ளி

இவற்றைப் பழைய கோப்பிலிருந்து கண்டேன். 1938க்குப் பிறகு நடந்தவற்றைக் கிருஷ்ணசாமி அய்யங்கார் நினைவு படுத்தினார்.

எந்த ஊரிலாவது, எந்தப் பள்ளியிலாவது - உயர்நிலைப் பள்ளி யானாலும் சரி-இடம், தளவாடம் போதாமை பற்றி, சேர வருகிற அனைவருக்கும் இடம் கொடுக்க முடியாமல் போனால், அந்தப் பள்ளியின் நிர்வாகம் விரும்பினால், ‘விப்டு முறையைப் பின்பற்றி, அதிகமானவர்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு விப்டும் நான்கு மணிநேரம் வேலை செய்யும். விப்ட்டை ஏற்றுக் கொள்ளுகிற பள்ளிகள் வாரத்திற்கு ஆறு நாள்கள் வேலை செய்யும்.

அதாவது ஒவ்வொரு விப்டும் வாரத்திற்கு இருபத்துநான்கு மணிகள் இயங்கும்.

ஒரே ஆசிரியரை இரண்டு விப்டிலும் வேலை செய்ய வைக்கக் கூடாது. ஒவ்வொன்றிற்கும் தனித்தனி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

அப்படிச் செய்வதற்குத் தேவையான கூடுதல் ஆசிரியருக்கு அரசின் நிதி உதவி உண்டு, ‘ என்ற ஆணையை நினைவு படுத்தினார். அது சான்றோர் ஒ. பி. இராமசாமி முதல் அமைச்சராகவும் திரு. அவினாசிலிங்கனார் கல்வி அமைச்சராகவும் விளங்கிய காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகும்.

அதைப் பயன்படுத்தி, இங்கும் அங்கும் சிற்சில பள்ளிகள் அரை நாள் பள்ளிகளாக இயங்கி வருவதை, அய்யங்கார், சுட்டிக்காட்டினார்.

வேலைச்சுமை அதிகமாகும்

‘அப்படியானால், இப்போது இராசாசி சொல்லும் திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாமே ‘ என்று குறுக்குக் கேள்வி கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/431&oldid=623363" இலிருந்து மீள்விக்கப்பட்டது