பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 நினைவு அலைகள்

‘முந்தியது தேவைப்படும்போது தேவைப்படுவோர் மட்டும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மருந்தாகும். இப்போதுள்ள யோசனை, எல்லோரும் உண்ண வேண்டிய சாப்பாடு.

‘முதலமைச்சரின் திட்டப்படி, ஒரே அணி ஆசிரியர்கள் இரு முறையும் வேலை செய்தாக வேண்டும்.

‘அதாவது, புதிய திட்டத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் வேலையும் ஆறு நாளைக்கும் அதாவது, முன்பு இருபத்தெட்டு மணி நேரம் வேலை செய்தவர்கள் இனி முப்பத்தாறுமணி வேலை செய்ய நேரிடும். அதனால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் எதிர்ப்பு வளரும்’ என்று எச்சரித்தார்.

குடிமக்களுக்கிடையே வேறுபாடா?

மேலும் ஒன்றையும் சுட்டிக்காட்டினார். ‘'1937 ஆம் ஆண்டில் நமக்கென்று ஒர் அரசியல் அமைப்புச் சட்டம் இல்லை; இப்போது இருக்கிறது.

‘அதன்படி, ஒரு பிரிவு குடிமக்களுக்கும், வேறு ஒரு பிரிவு குடி மக்களுக்கும் இடையே வேறுபாடு காட்டக்கூடாது.

‘நகரப் பிள்ளைகளுக்கு அய்ந்து மணி நேரப்படிப்பு, நாட்டுப்புறப் பிள்ளைகளுக்கு மூன்று மணி நேரப் படிப்பு என்பது, இரு பிரிவினருக்கும் இடையே வேறுபாடு காட்டுவதாகாதா என்பதை அரசியல் சட்ட அறிஞர்கள் முடிவுகட்ட வேண்டும்’ என்றார்.

மக்கள் பகை வளரும்

‘அப்போது நாட்டுப்புறம் முழுவதற்கும் அரைவேளைப் படிப்பு கூடாது’ என்கிறீர்களோ என்று அய்யங்காரைக் குறுக்கே கேட்டேன்.

“ஆம், அப்படியே! இது வீண் வம்பை விலைக்கு வாங்குவது: தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைப் பகைத்துக் கொள்வது; பொது மக்களின் வெறுப்பைத் தேடிக்கொள்வது. ஆனால், இவ்வளவு பச்சையாகப் பதில் எழுத வேண்டாம். இதமாக எழுதுவோம்’ என்று அய்யங்கார் கூறினார்.

‘சரி ஒரு மாற்று யோசனை கூறுவோம். ஏற்கெனவே உள்ள முறையை அனுமதிக்கும் அரசு ஆணையைப் பயன்படுத்தி, அதிகப் பிள்ளைகளைத் துண்டி ஊக்குவிக்க உரிமம் கொடுங்கள் என்று பிரதம மந்திரிக்கு எழுதினால் என்ன?’ என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/432&oldid=623364" இலிருந்து மீள்விக்கப்பட்டது