பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 B நினைவு அலைகள்

முதலமைச்சர் இயக்குநருக்குப் பேட்டி கொடுத்தார். இயக்குநர் என்னை உள்ளே அழைத்துச் செல்லவில்லை.

வெளியே, தனி அலுவலர் அறையில் காத்து இருந்தேன்.

அரை மணிக்குப்பின் வெளியே வந்த இயக்குநர் என்னை அழைத்துக்கொண்டு தமது அலுவலகத்திற்குத் திரும்பினார்.

வருகிற வழியில்,

‘இன்று மாலை உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கிறதா? இல்லையென்றால், அலுவலகத்தில் மேலும் சிலமணிகள் இருந்து வேலை செய்யலாமா? நாம் இருவருமாக உட்கார்ந்து கவனிக்க வேண்டிய அவசரப் பணி ஒன்று வந்து இருக்கிறது’ என்றார்.

‘இயக்குநரோடு இருந்து வேலை செய்ய முடியும்’ என்றேன்.

‘இன்று பேசப்போன விஷயம் முடிந்ததும், முதலமைச்சர் இராசாசி அவர்கள் என்னைப் பார்த்து,

‘அரை வேளைப் படிப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதில் உங்களுக்கு ஏதோ தயக்கம் இருப்பதாகத் தெரிகிறது. அப்படியானால், அதற்காக வெளியார் ஒருவரைத் தனி அலுவலராக நியமித்துக் கொள்ளட்டுமா? அவர் உங்கள் நிர்வாகத்தில் தலையிட மாட்டார். ஊர் ஊராகச் சென்று பேசி, புதிய திட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்டுவார். சரிதானா? “ என்று கேட்டார்.

‘அரசின் முடிவுகளைச் செயல்படுத்தவே அலுவலர்கள் இருக்கிறோம். அரசு அரை வேளைப் படிப்பு போதுமென்று முடிவு செய்துவிட்டால், நானே நடைமுறைப்படுத்துகிறேன். அதற்காகத் தனி அலுவலரை நியமிக்கத் தேவை இல்லை’ என்று பதில் சொன்னேன்.

அவர் நினைத்திருக்கிற தனி அலுவலர் பெயரைக் கூறினார். அப்பெயரைப் பின்னால் தெரிவிக்கிறேன் என்று கூறிவிட்டு இயக்குநர் தொடர்ந்தார்.

முதலமைச்சரோ, ‘நான் சொல்லுகிறேன் செய்யுங்கள். இன்றே சுற்றறிக்கை அனுப்பிவிடுங்கள், அச் சுற்றறிக்கையை இன்றிரவே, ‘இந்து’, ‘எக்ஸ்பிரஸ்’ ஆகிய நாளிதழ்களுக்குக் கொடுத்துவிடுங்கள்’ என்றார்.

‘எனவே, நாம் இருவரும் அலுவலகத்தில் உட்கார்ந்து, சுற்றறிக் கையை இன்றே எழுதி ஆயத்தம் செய்து முடித்துவிடுவோம்’ என்று இயக்குநர் சொல்லுகையில், மாலை அய்ந்து அடிக்கப் பத்து மணித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/434&oldid=623366" இலிருந்து மீள்விக்கப்பட்டது