பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 421

அடிப்படை ஊழியர்கள் வழியாக இந்து, எக்ஸ்பிரஸ், தினமணி. தினத்தந்தி அலுவலகங்களுக்கு, அச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப் பட்டது. i.

‘எடுத்ததை முடித்து விட்டோம்’ என்ற நிறைவோடு இயக்குநர் வீடு சென்றார்; நாங்களும் சென்றோம்.

எனக்கோ, அன்று இரவெல்லாம் துாக்கம் இல்லை.

53. முதலமைச்சர் இராசாசியின் கட்டளை

செயலரின் அதிர்ச்சி

மறுநாள் பொழுது விடிய, இயக்குநர் இல்லத்தின் தொலைபேசி அலறிற்று. இயக்குநர் கோவிந்தராசுலு பேசினார்.

‘சுலு எப்போது முதல் நீர் அரசாக மாறிவிட்டீர்?’ இப்படி ஒருவர் இயக்குநரைக் கேட்டார்.

அவர் யார்? சென்னை மாகாணக் கல்வித்துறைச் செயலர்.

இயக்குநர், ‘'நான் எப்போதும் அரசாகும் வாய்ப்பு இல்லை’ என்று இனிமையாகப் பதில் கூறினார்.

‘அப்படியானால், புதிய கல்வித் திட்டத்தை அரசின் ஆலோசனைக் கும் ஆணைக்கும் அனுப்பாமல், நீங்களாகவே எப்படி நடைமுறைப் படுத்த ஆணையிடலாம்? - இது செயலர், திரு. உன்னித்தன் அய்.சி.எஸ். ஸின் கேள்வி.

‘நீங்கள் அலுவலகம் சென்றதும் பார்க்கப் போகிற கடிதத்தில் விவரமாக எழுதியுள்ளேன். அதில் இப்படி ஒரு திட்டத்தை உடனே நடைமுறைக்குக் கொண்டுவரும்படி கனம் முதல் அமைச்சர் கட்டளையிட்டார். இத் திட்டத்தை அரசுக்கு ஆலோசனையாக அனுப்பினால் போதும். அரசின் ஆணையைக் கேட்க வேண்டாம்.

“புதிய திட்டத்தைச் செயல்படுத்த சுற்றறிக்கை அனுப்பி விட்டு, அரசின் தகவலுக்காக அதன் படியை அனுப்பி வையுங்கள் என்பது முதலமைச்சரின் கட்டளை. அதை அப்படியே நிறைவேற்றியுள்ளேன். அவ்வளவே நான் செய்தது’ என்றார்.

முதலமைச்சர் பெயரை இழுக்கும்போது மோதிக்கொள்ள முடியுமா எனவே, செயலர் பேச்சை அத்தோடு நிறுத்திக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/437&oldid=623369" இலிருந்து மீள்விக்கப்பட்டது