பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 423

காமராசரின் கண்டனம் - பெரியார், அண்ணா எதிர்ப்பு

வெளியுலகில், இடி முழங்கிற்று. அரசியல் வானில், பல பக்கங் களிலும் மின்னல்கள் மின்னின.

மேற்படி சுற்றறிக்கை வெளியாகும்போது, தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் ஏழைபங்களார் திரு. கு. காமராசர் விருது நகரில் இருந்தார்.

இந்தச் சுற்றறிக்கை பற்றி எரிச்சல் கொண்டார். காங்கிரசு இயக்கத்தவர் அவரிடம் சென்று மனக்குறை பட்டனர்.

விருதுநகரில் காங்கிரசின் சார்பில் பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்தில் உரையாற்றுகையில்,

‘இந்தப் பைத்தியக்காரத் திட்டத்தை ஒழித்து விட்டுத்தான் மறுவேலை’ என்று காமராசர் முழங்கினார்.

புதிய திட்டம் தந்தை பெரியாரைப் பொங்கி எழச் செய்தது.

‘பெற்ாேர் தொழிலுக்குப் போகட்டும்’ என்பது ஆத்திர மூட்டியது.

‘குலக்கல்வித் திட்டத்தை ‘க் கண்டித்து அறிக்கை எழுதி தமது விடுதலை நாளிதழில் வெளியிட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிஞர் அண்ணா கண்டனம் தெரிவித்தார். இப்படிப் பற்பல காட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

வேலைச் சுமை கூடுதல் ஆகிவிட்டதைப்பற்றித் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பதை பதைத்தார்கள்.

கையெழுத்து வேட்டை

இரண்டொரு நாள்களில் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக, கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கத் தலைப்பட்டனர்.

விவாதிக்க மறுத்தேன்

அத்தகைய முயற்சியில் முன்னணில் இருந்தவர்களில் திரு. வி.கே. இராமசாமி முதலியார் ஒருவர் ஆவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/439&oldid=623371" இலிருந்து மீள்விக்கப்பட்டது