பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 நினைவு அலைகள்

இவ்விவகாரம் பற்றி ஆழம் பார்ப்பதற்காக, அப்பெரியவர், என்னைத் தேடி வந்தார். நீண்ட நேரம் பேச்சுக்கொடுத்தார். நான் புதிய திட்டம் பற்றி எவ்வித உட்தகவலும் கொடுக்கவில்லை. எனவே, ஏமாற்றத்தோடு திரும்பினார்.

திட்டம் வெளியான சில நாள்களுக்குப்பின், ஒரு மாலைப்பொழுது, நான் மேற்கு மாம்பலம் மாநகராட்சிப் பள்ளியின் புதிய கட்டடத் இறப்பு விழாவில் உரையாற்ற என் காரில் போய்க் கொண்டிருந்தேன்.

கோடம்பாக்கம் இருப்புப் பாதைக் கதவு அடைப்பட்டிருந்தது. காரில் காத்து இருந்தேன். வாயில் திறப்பதற்கு முன், மற்றோர் கார் பின்னால் வந்து நின்றது.

அதில், அமைச்சர் யூ. கிருஷ்ணராவ் இருந்தது என் கண்களில் பட்டது.

அவர் சென்னை நகர மேயராக இருந்த காலத்தில்தான், நான் மாநகராட்சிக் கல்வி அலுவலராகச் சென்றேன்.

எனவே, பழைய பற்றுதல் பற்றி என் காரிலிருந்து இறங்கி அவர் கார் அருகில் சென்றேன். அவர் தம் காரில் என்னை ஏற்றிக் கொண்டார்.

‘இப்போது வெளியாகியுள்ள புதிய தொடக்கக் கல்வித் தி ட்டத்திற்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டா? ‘ என்று கல்வி அமைச்சர் யூ. கிருஷ்ணராவ், என்னைக் கேட்டார்.

‘'நான், தொடக்கக் கல்வி துணை இயக்குநர், அந் நிலையில் புதிய கல்வித் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியவன்’ என்றேன்.

‘அப்படியானால் அதுபற்றிக் கேள்வி கேட்டு, சங்கடப்படுத்த

மாட்டேன்’ என்று சொல்லிப் பேச்சை வேறு பக்கம் திருப்பிவிட்டார்.

புதிய திட்டம் நகரங்களில் நடைமுறைக்கு வரவில்லை, எனவே, அன்றைய பள்ளிக்கூட நிகழ்ச்சியில் எவரும் அதைத் தொடவில்லை.

மேலும் சில நாள்கள் நகர்ந்தன.

இந்திய அரசின் இரயில்வே துணை அமைச்சர் திரு. ஓ. வி. அளகேசன், அலுவல் பற்றிச் சென்னைக்கு வந்தார். தமது மூத்த சகலர், திரு. மீ. பக்தவத்சலம் இல்லத்தில் தங்கியிருந்தார்.

செய்தி அறிந்த நான், அளகேசனைக் காணச் சென்றேன்.

பக்தவத்சலனாரும் அளகேசனும் பேசிக்கொண்டு இருந்தார்கள். என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/440&oldid=623373" இலிருந்து மீள்விக்கப்பட்டது