பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நினைவு அலைகள்

அவர் ஏற்கெனவே எனக்குப் பழக்கமானவர்; என்னிலும் இளையவர்.

இருப்பினும் அவ்வளவு முக்கியமான பணியில் இருப்பவர் என்னைத் தேடி வந்தது பற்றி அதிர்ச்சி அடைந்தேன். விரைந்தோடி, வரவேற்று வந்தேன்.

அவர் நாற்காலியில் அமர்ந்ததும், என்னிடம் ஒரு பயணச் சீட்டை நீட்டினார்.

சென்னை மையப் புகைவண்டி நிலையத்தில் இருந்து ஆம்பூருக்கு எடுக்கப்பட்ட முதல் வகுப்புப் பயனச்சீட்டு.

‘இன்று பகல் பெங்களுர் விரைவு வண்டியில், முதல் அமைச்சர் ஆம்பூர் செல்கிறார். நீங்கள் அங்கு வரவேண்டுமாம். இது முதலமைச்சரின் கட்டளை அதே வண்டியில் உங்களுக்கும் இடம் பதிவு செய்துள்ளோம்.

‘திரும்பி வருவதற்கும் இடம் ஏற்பாடு, செய்துவிட்டு, பயணச் சீட்டை ஆம்பூரில் உங்களிடம் கொடுப்பார்கள். சில மணி இடை வெளியில் அறிவிப்புக் கொடுப்பதற்காக வருந்துகிறேன் என்று சபாநாயகம் கூறினார்.

‘'நான் வெளியூர் செல்வதற்கு, இயக்குநர் ஒப்புதல் தேவை: அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ளுகிறேன். அவர் இசைந்தால் போய் வருகிறேன்’ என்றேன்.

‘இயக்குநரிடம் நானே சொல்லி ஒப்புதல் பெற்றுவிட்டேன். அதன் பிறகே, பயணச்சீட்டு வாங்க ஏற்பாடு செய்தேன் என்று பதில் கூறிவிட்டுப் புறப்பட்டு விட்டார்.

பிறகு, நான் இயக்குநரோடு தொடர்பு கொண்டேன்.

ஆம்பூர் பயணம்

ஆம்பூரில் திரு. நாதமுனி நாயுடு எம்.எல்.சி. யின் முயற்சியில், வடஆர்க்காடு மாவட்டக்கல்வி மாநாடு கூட்டப்பட்டு இருக்கிறது. ‘புதிய கல்வித் திட்டத்தை ஆதரிக்க அம் மாநாடு, இந்த வம்பில் உன்னை ஏன் இழுத்து விடுகிறார்களோ? என்னை இதிலிருந்து விட்டுவிடச் சொன்னால், என்ன நினைப்பார்களோ என்று நான் சும்மா இருந்து விட்டேன்.

‘உன் நிலை தர்ம சங்கடமானது. எச்சரிக்கையாகப் பழகு; போய் வா’ என்று இயக்குநர் இசைவு தந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/442&oldid=623375" இலிருந்து மீள்விக்கப்பட்டது