பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடது. சுந்தரவடிவேலு 427

பிறகு என் மனைவியிடம் சொல்லி, பயணத்திற்கு வேண்டியவற்றை ஆயத்தம் செய்யச் சொன்னேன்.

குழந்தை திருவள்ளுவன் புகைவண்டி நிலையம் வந்து வேடிக்கைப் பார்க்க விரும்பினான். அவனுக்குத் துணையாக காந்தம்மா வர ஒப்பினார். -

பெங்களுர் விரைவு வண்டி புறப்படுவதற்கு வெகு முன்னதாகவே, போய்ச் சேர்ந்தோம். என் இருக்கையைத் தேடி, அங்குப் படுக்கை, பெட்டியை வைத்துவிட்டு, கீழே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

இராசாசி திருவள்ளுவனை வாழ்த்தினார்

புறப்படும் நேரத்திற்கு முன்னதாகவே முதலமைச்சர் வந்தார்.

எனக்கு அடுத்த பெட்டியில் அவரது இருக்கை இருந்தது.

அவர் பெட்டியை நெருங்குகையில், நாங்கள் மூவரும் அவரை வணங்கினோம்.

அவர், பெட்டிக்குள் சென்று பார்த்து விட்டே கீழே இறங்கினார்.

என்னைப் பார்த்து, ‘உங்கள் மகனா?’ என்று கேட்டார்.

“ஆம்” என்றேன். அவனை அருகில் அழைத்தார். கன்னங்களைத் தடவினார்.

இரு ஆப்பிள் பழங்களை அவனிடம் கொடுத்தபடியே,

‘உன் பெயரென்ன? “ என்றார்.

‘திருவள்ளுவன் என்று சிறுவன் பதில் கூறவே, ‘அப்படியே வளர்வாய்’ என்று வாழ்த்தினார்.

என் மனைவியைப் பார்த்து, ‘நல்ல பையன்’ என்றார்.

திருவள்ளுவன், நன்றி கூறியபடியே மீண்டும் வணங்கினான்.

பேசும்படி முதல்வர் கட்டளை

புகைவண்டி உரிய நேரத்தில் புறப்பட்டு, ஆம்பூர் சென்றடைந்தது.

ஏராளமானவர்கள் கூடி, முதலமைச்சரை வரவேற்றார்கள்.

அங்கு இரு நிகழ்ச்சிகள் முதல் நிகழ்ச்சி, இந்து உயர்நிலைப் பள்ளியின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/443&oldid=623376" இலிருந்து மீள்விக்கப்பட்டது