பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நினைவு அலைகள்

‘நெ. து. சு. வுக்கு வயது குறைவாக இருக்கலாம். திறமை குறைவு இல்லை.

‘நேர்மையும், நடுநிலைமையும் சமாளிக்கும் திறமையும் உடைய நெ.து. சு.வே உயர் பள்ளி-கல்லூரி துணை இயக்குநர்களின பணியையும் செம்மையாகப் பார்த்துக் கொள்வார்’ - இது மூதறிஞரின் மதிப்பீடு.

‘திரு வி.கே. கிருஷ்ணமேனனுக்குப் பதவி நீடிப்பு வேண்டாம். நெ.து. சு. இரு பதவிகளை ஏற்றுக்கொள்ளட்டும். உயர்நிலைப் பள்ளி-கல்லூரி ஆகிய இரு பிரிவுகளுக்கும் நெ.து. சு. வை துணை இயக்குநராக நியமிக்கவும் இப்படி முதலமைச்சர் ஆணையிட்டார்.

அதுபற்றிக் கிருஷ்ணமேனன் முகம் சுளிக்கவில்லை; என்மேல் அழுக்காறு கொள்ளவில்லை; பற்றற்ற துறவிபோல அம்முடிவை ஏற்றுக்கொண்டார்.

நான் ஏற்க வேண்டிய பணிபற்றிய சிக்கல்களை, நுட்பங்களை கோப்புகளை, பொறுமையாக எனக்குக் காட்டினார்.

எல்லோரிடமும் நல்லெண்ணத்தை விதைத்துவிட்டுப் பதவி விலகினார்.

தொடக்கக் கல்வித் துனை இயக்குநராக எவர் நியமிக்கப்பட்டார்?

டாக்டர் எம். டி. பால் நியமிக்கப்பட்டார். அவர் திரு ஜி. இராமச்சந்திரனோடு, பல நகரங்களுக்குச் சென்று, ஆசிரியர் கூட்டங்களுக்குத் திறமையாக ஏற்பாடு செய்தார்.

ஆள்கள் கதையைவிட்டு, காலத்தின் போக்கைச் சிறிது கவனிப்போம்.

புதிய சட்டம் பற்றிச் சட்டமன்றம்

1953 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் சென்னைச் சட்டமன்றம்

கூடியது.

அரசு அண்மையில் கொண்டு வந்த புதிய தொடக்கக் கல்வித் திட்டத்தைச் சட்டமன்றம் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்வது என்ற தீர்மானம் 29-7-53 அன்று அரசின் சார்பில் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

பல திருத்தங்கள் கொடுக்கப்பட்டன. தீர ஆலோசனை செய்து திட்டத்தைத் தள்ளிவிட வேண்டும். ‘ஆலோசனைக்குப்பின் வல்லுநர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/452&oldid=623386" இலிருந்து மீள்விக்கப்பட்டது