பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 437

குழுவிற்கு அனுப்ப வேண்டும் ‘ என்பன அவற்றில் முக்கியமான |திருத்தங்கள்.

புதிய கல்வித் திட்டம் எவ்வளவு நேரம் விவாதிப்பது என்பதிலேயே அவையின் அருமையான காலத்தை அளவுக்குமேல் செலவிட்டார்களோ என்று கூறத்தோன்றும்.

காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் புதிய திட்டத்தை எதிர்த்துக் கையெழுத்திட்டது உலகறிந்த செய்தி. இருப்பினும் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் ‘மாற்றானுக்கு இடங்கொடேல் என்ற கொள்கையைப் பின் பற்றியது. அப் போதைக்குத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தது.

பல தரப்பினரும் பேசியபின், இராசாசி நீண்ட உரையாற்றினார். பிறகு திருத்தங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, அவையின் முடிவுக்கு வந்தன.

‘கைவிட்டு விட வேண்டும்’ என்ற திருத்தத்திற்கு ஆதரவாக 138 வாக்குகளும் எதிராக 138 வாக்குகளும் சமமாகக் கிடைத்தன.

சபைத்தலைவர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். வல்லுநர் குழுவிற்கு அனுப்பும் திருத்தத்திற்கு ஆதரவாக 139 ஒட்டுகளும், எதிராக 137 வாக்குகளும் கிடைத்தன. திருத்தம் இரண்டு வாக்கில் நிறைவேறியது.

‘அரசின் முக்கியமான திட்டம் ஒன்றைச் சட்டமன்றம் ஏற்றுக் கொள்ளாததால், அமைச்சரவை பதவியை விட்டுவிலக வேண்டும்’ என்று அடுத்த நாள் சட்டமன்றக் கூட்டத்தில் சிலர் குரல் எழுப்பினார்கள். -

வெளியில் அப்படிக் குரல் கொடுத்தோர் உண்டு. நீதிமன்றம் சென்று அரசு விலகும்படி ஆணை வாங்கப்போவதாகவும் பேச்சு அடிபட்டது. அந் நெருக்கடி தற்செயலாக விலகிற்று.

எப்படி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/453&oldid=623387" இலிருந்து மீள்விக்கப்பட்டது