பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 நினைவு அலைகள்

புதிய மாநிலம் அமையும்வரை, சென்னை மாகாண அரசு, மேற் கொண்டு ஏலம் விடாது; எவருக்கும் புறம்போக்கு நிலங்களை ஒதுக்காது.

மேற்கூறிய உறுதி மொழிகளின் பேரில், தீர்மானத்தை வாக்கு எடுப்பு இல்லாமல் கைவிட்டு விடுவோம் என்பது அரசின் நிலைமை.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் திரளாத அந் நிலையில, அரசின் உறுதி மொழியை ஏற்றுக்கொள்வதே விவேகம் என்று பல உறுப்பினர்கள் காதைக் கடித்தார்கள்.

தீர்மானம் கொண்டு வந்தவர்கள் சார்பில், அவையின் முடிவை முடிவு செய்ய வற்புறுத்தப்பட்டது.

வாக்கு எடுத்ததில், 119 வாக்குகள் ஆதரவாக இருந்தன.136 வாக்குகள் எதிராக இருந்தன.

அது தீர்மானத்திற்குத் தோல்வி; அரசிற்கு வெற்றி; தாராள வெற்றி.

முந்திய நாள் புதுக்கல்வித் திட்டத்தை வல்லுநர்கள் குழுவின் ஆலோசனைக்கு அனுப்பச் சொன்ன திருத்தம் ஒரு வாக்கு அதிகத்தில் நிறைவேறியது,

அது அரசின் மேல் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுவதற்கு ஒப்பாகும் என்று தென்னேட்டி விசுவநாதம் என்னும் காங்கிரசு உறுப்பினர் சொல்ல; அவர் வாயை அடைப்பதுபோல் இப்பெரும் வெற்றி அமைந்தது.

30-7-1953 அன்றைய வாக்கெடுப்பு அரசிடம் பெரும்

தம்பிக்கையைக் காட்டுவதாகக் கொள்ளப்பட்டது.

முதல் அமைச்சர் இராசாசியின் ஆட்சி நீடித்தது.

பருலேக்கர் குழு பரிந்துரை

சட்டமன்ற முடிவின்படி, புதிய தொடக்கக் கல்வித் திட்டம் பற்றி ஆய்ந்து ஆலோசனை கூறும்படி, அரசு ஒரு குழுவை அமைத்தது.

அக் குழுவின் தலைவர், திரு பருலேக்கர் என்ற மராட்டியக் கல்வியாளர் ஆவார்.

அவர், சில ஆண்டுகளுக்குமுன், தாம் எழுதிய கல்வி பற்றிய நூலில் அரைவேளைப் பள்ளிகளுக்காக அழுத்தமாக வாதாடி இருந்தார்.

அக் குழுவில் இயக்குநர் கோவிந்தராசுலு இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/456&oldid=623390" இலிருந்து மீள்விக்கப்பட்டது