பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 நினைவு அலைகள்

கல்வித்துறை இயக்குநர் திரு கோவிந்தராசுலு நாயுடுவை ஆந்திர மாநிலத்திற்கு ஒதுக்கினார்கள்.

அந்த மாநிலத்தின் பொதுக்கல்வி இயக்குநராக அவர் நியமிக்கப் பட்டார்.

அவர், அப்படி நியமிக்கப்படுவார் என்ற பேச்சு வந்ததும் மற்றொரு பேச்சும் வந்தது,

கல்வித் துறையில் உள்ள எவரையும் இயக்குநராக்க மாட்டார்கள்.

இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பார்கள் என்ற செய்தி காற்றில் மிதந்தது.

மீண்டும் முன்போலவே நானும் அமைச்சர் மாண்புமிகு சி.சுப்பிர மணியத்தைக் கண்டேன். அரசு - கல்வித் துறையைச்சேர்ந்த எவரை வேண்டுமானாலும் நியமிக்கட்டும் என்று அன்புடன் வேண்டினேன்.

முதல் பெண் இயக்குநர்

வேண்டுகோள் வீண் போகவில்லை. அரசு திருமதி ஓ.சி. சீனிவாசன் என்கிற கேரள அம்மையாரைக் கல்வித்துறை இயக்குநராக நியமித்தது.

செய்தி வெளியானதும், அவர் இல்லம் சென்று வாழ்த்து கூறினேன்.

‘நேற்று நியமனச் செய்தியை என்னிடம் நேரில் கூறிய, கல்விச் செயலர், திரு வெங்கடேசுவரன் அய். சி. எஸ்.,

‘நீங்கள் எல்லாப் பிரிவுகளைப் பற்றியும் நெ. து. சு. வின் ஆலோசனையைக் கேட்கலாம். அவருக்கு அவ்வளவும் அத்துப்படி: மேலும் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படாதவர்; தங்களுக்குச் சொல்லும் ஆலோசனையைப் பிறரிடம் சொல்லமாட்டார். மிக நம்பிக்கைக்கு உரியவர்’ என்று என்னிடம் சொன்னார்.

‘ஆகவே, உங்கள் வழிகாட்டலை அடிக்கடி கேட்பேன்’ என்றார், திருமதி ஒ. சி. சீனிவாசன்,

சொன்னபடியே செய்தார். கூடுதல் சுமை பற்றி நான் சுணங்கவில்லை.

வீடு மாற்றம்

திருமதி சீனிவாசன், சேத்துப்பட்டு நவ்ரோஜி சாலையில் ஒர் வாடகை வீட்டில் குடியிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/458&oldid=623392" இலிருந்து மீள்விக்கப்பட்டது