பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() - நினைவு அலைக

தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அய்யர்

அன்று, திருப்பூர் நகர் மன்ற ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, பெயர் பெற்ற கல்வி நிலையமாக இருந்தது. அப் பெருமையைப் பல்லாண்டு, காத்து வந்தது.

அப்போது, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் யார்? திரு. கிருஷ்ண மூர்த்தி அய்யர் என்னும் அறிஞர்.

அவர், நாவன்மைக்குப் புகழ்பெற்ற சீனிவாச சாஸ்திரியாரின் நெருங்கிய உறவினர்; ஆங்கிலப் புலமை மிக்கவர்; ஆங்கிலத்தில் உரையாற்றுவதில் வல்லவர்; ஆளுமையும் செயல்திறனும் சேர்ந்த, தலைமை ஆசிரியர்.

புலமை, திறமை, பொலிவு, கனிவு, கண்டிப்பு ஆகிய அய்ந்தும் ஒரு பள்ளி ஆசிரியருக்குத் தேவை.

இவற்றைப் பெற்றிருந்த தலைமை ஆசிரியர் திரு. கிருஷ்ண மூர்த்தி

அய்யர், என் மதிப்பைப் பெற்றார்.

தந்தி வந்தது

திருப்பூரில், இரண்டாம் நாள் பிற்பகல், நான் நடுநிலை வகுப்புகளில், பாடங்கள் நடத்துவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவ் வேளை, தலைமை ஆசிரியரின் கடைநிலை ஊழியர் என்னிடம் வந்தார்.

‘ஏதோ, தந்தியோடு, கோவையில் இருந்து ஒருவர், உங்களைக் காண வந்து இருக்கிறார்; தலைமை ஆசிரியர் அறையில் உள்ளார்; உடனடியாகத் தங்களிடம் சொல்லவேண்டிய செய்தியாம்; உடனே பார்க்க வேண்டுமாம்’ என்று மெல்லிய குரலில் கூறினார்.

நான் உடனே, தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்றேன். நான், உள்ளே காலெடுத்து வைத்ததும், முன் பின் தெரியாத ஒருவர் - ஒரு பக்கமாக நின்று கொண்டிருந்த ஒருவர் - என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டினார். -

அதை வாங்கிக்கொண்டேன். ஒரு நாற்காலியில் அமர்ந்த பின், அக்கடிதத்தோடு இணைந்த ஏற்கெனவே, பிரிக்கப்பட்டிருந்த, தந்தியைப் படித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/46&oldid=623394" இலிருந்து மீள்விக்கப்பட்டது