பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 445

அதனால், திருமதி சீனிவாசன், துணை இயக்குநராகப் பதவி இறக்கம் பெற்றார்; அம்மையார் அதை சிறிதும் பொருட்படுத்த வில்லை.

முன்னர் எங்கள் அனைவருக்கும் இயக்குநராக இருந்தவர்தானே என்று ஆறுதலோடு ஏற்றுக்கொண்டார். s

அடுத்த நாள் வந்த கடிதம் அம்மையாருக்கு விரக்தியை ஏற்படுத்தியது.

அரசு அலுவலர்கள் ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கோ பதவிக்கோ மாறுதல் ஆகும்போது, பயண நாள் என்று சில நாள் எடுத்துக் கொள்ளலாம். அதைக்கூட எடுத்துக் கொள்ளாமல் அடுத்த நாளே வந்து பதவி ஏற்றுக் கொள்ளப் போவதாக, திரு கோவிந்தராசுலு நாயுடு எழுதி இருந்தார்.

‘பதவி இறக்கம் பெறுபவருக்குச் சில நாள் தவணைகூடக் கொடாதவரிடம் ஏன் வேலை செய்யவேண்டும் ‘ என்று புண்பட்ட உள்ளத் தோடு அம்மை யார் கோவிந்த ராசுலு பதவிக்கு வந்ததும் சிலநாள் விடுப்பில் சென்று ஒய்வு பெற்றுக்கொண்டார்.

56. காமராசர் முதல்வரானார்

தமிழ்நாடு அரசியல் உலகிலும் எதிர் பார்த்ததற்கு மாறாகப் பெரியதோர் நிகழ்ச்சி நடந்தது.

இராசாசியின் நிபந்தனை

முன்பெல்லாம் சட்டமன்ற காங்கிரசு கட்சித் தலைவர் தேர்தல் ஆண்டுதோறும் நடைபெறும். ஒருவரே மீண்டும் மீண்டும் தேர்ந்து எடுக்கப்படுவதாயினும் தேர்தல்கள் ஒழுங்காக நடைபெறும். 1954ஆம் ஆண்டுக்கான தலைவர் தேர்தல் நெருங்கியது.

காமராசர் உட்படப் பலரும் முதல்வர் இராசாசியே தொடர வேண்டுமென்று விரும்பினர். அதே நேரத்தில் பொது மக்கள் வெறுத்தும் எதிர்த்தும் வந்தனர். பள்ளிகளின் வருகையைப் பாதித்துவிட்டதால் அரைவேளைப் படிப்பு முறையைக் கைவிட்டுவிட வேண்டும் என்று காங்கிரசு வட்டாரங்களிலும் பிற வட்டாரங்களிலும் பெரும்பாலோர் கருதினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/461&oldid=623396" இலிருந்து மீள்விக்கப்பட்டது