பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 நினைவு அலைகள்

எனது நெறி

முதன் முறை அப்படி அவர் வந்த சிறிது நேரத்திற்கு எல்லாம் நான் தற்செயலாக அவ் வீட்டிற்குச் சென்றேன். அப் பெரியவர் வந்து பேசிக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டதும் உள்ளே நுழையாமல் வந்துவிட்டேன்.

என் மாமனார், எவ்வளவு சொல்லியும் மேலே சென்று கும்பிடு மட்டும் போட்டு விட்டு அங்குத் தங்காமல் திரும்பி விட்டேன். பலமுறை இப்படி விலகி வந்துவிட்டேன்.

அரசு ஊழியன் பொது மக்களின் ஊழியன். அவனுடைய சொந்தக் கட்சிப்பற்று தனது பணியின்போது குறுக்கிடக்கூடாது. எல்லார்க்கும் நடுவில் நின்று, உரிய நேரத்தில் சொல்ல வேண்டியதைச் சொல்லவும் அதைவிட விழிப்பாக நேரா நேரத்தில் எல்லாப் பிரிவினரின் கோரிக்கைகள்ையும் கவனிக்கவும் கடமைப்பட்டவன்.

எனவே, பெரியவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதும் அவர் களுக்குத் தாட்சண்யப்படும் நிலைக்குத் தள்ளிக் கொள்வதும் நல்லதல்ல.

இப்படி நானாக ஏற்றுக்கொண்ட நெறியைக் கட்டிக்காக்கும் விழைவில் பல பெரியவர்களுக்கு நெருக்கமானவனாகும் வாய்ப்புகளில் இருந்து விலகினேன். பழைய பழக்கத்தால் இன்றும் அப்படியே விலகி நிற்கிறேன்.

காமராசர் வென்றார்

சென்னைச் சட்டமன்ற காங்கிரசுக் கட்சிக்கூட்டம் முறைப்படி

கூடிற்று. தேர்தல் நடந்தது.

திரு சி. சுப்பிரமணியம், திரு கு. காமராசர் ஆகிய இருவர் போட்டி

யிட்டார்கள். திரு. கு. காமராசர்தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அலெக்சாண்டர் என்ற கிரேக்க மாவீரர், தம்மிடம் தோற்ற புருஷோத்த மனை, அரசனாக தலைமை ஏற்று நடத்தும்படி கட்டளையிட்டார்.

காமராசரும் அதே பாங்கில் நடந்து கொண்டார். திரு சுப்பிரமணியத்தைத் தமது அமைச்சரவையில் கல்வி, நிதி அமைச்சராக விளங்கும்படி வேண்டிக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/464&oldid=623399" இலிருந்து மீள்விக்கப்பட்டது