பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 449

திரு சுப்பிரமணியம் அதை உடனே ஏற்றுக் கொண்டதன் மூலம், ‘குடிசெயல் வகைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக ஒளிவிட்டார்.

புதிய கல்வித் திட்டம் நீங்கியது

காமராசர் ஆட்சி புதிய தொடக்கக் கல்வித் திட்டத்தை நீக்கிவிட்டது:

பழைய கல்வி முறைக்கு மாறியது.

ரெட்டியாரின் வேதனை

காமராசர் முதலமைச்சரான சில நாள்களுக்குப் பிறகு, திரு டி. சதாசிவ ரெட்டி லைபீரியாவில் இருந்து தமிழ் நாட்டுக்குத் திரும்பி வந்தார்.

அவர் சென்னைக்கு வந்தபோது, நான் மீனம்பாக்கம் விமானநிலையத் திற்குச் சென்று வரவேற்றேன்.

என் மாலையை ஏற்ற திரு. ரெட்டி, என்னிடம் கேட்ட முதல் கேள்வி


‘நீ இருந்துமா அரைவேளைப் படிப்பு முறை நுழைய முடிந்தது?” என்பதாகும்.

நான் அசட்டுச் சிரிப்புச் சிரித்தேன்.

‘பெரியோர்தங்கும் அறை'யில் அதைப்பற்றி விவரமாகக் கேட்டார். நான் அத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டாமென்று கொடுத்த குறிப்பை இயக்குநர் முதலமைச்சர் இராசாசியிடம் காட்டவில்லை என்பதைத் தெரிந்து கொண்டார்.

‘இறைவன் எவரையாவது அழிக்க விரும்பினால், அவருக்கு விபரீதமான சிந்தனையைக் கொடுப்பார் என்பது உலகத்தில் இருந்து வரும் வழக்கு.

‘இராசாசி போன்ற திறமையும் நேர்மையும் இணைந்த ஒருவரைச் சாதாரணமாகப் பதவியிலிருந்து நீக்க இயலாது. அவ்வளவு பெரிய

அறிவாளி இவ்வளவு பெரிய தவறைச் செய்வதற்கு வேறு விளக்கம் சொல்ல இயலாது” என்று வேதனையுடன் கூறினார்.

நான் ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/465&oldid=623400" இலிருந்து மீள்விக்கப்பட்டது