பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 நினைவு அலைகள்

முதலமைச்சர் காமராசருடன் பேட்டி

1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் காமராசர் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.

அப்போது, வடசென்னையில், விருதுநகர் நாடார் உறவின் முறையின் சார்பில் ஒர் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்க, உரிமை கேட்கும் மனு ஒன்று பொதுக்கல்வி இயக்ககத்தின் ஆலோசனையில் இருந்தது.

சில வாரங்களுக்குப் பிறகு முதலமைச்சர் காமராசர் இயக்குநரோடு தொலைபேசியில் பேசினார். ஒரு நாளையும் நேரத்தையும் குறிப்பிட்டார்.

‘வடசென்னை உயர் நிலைப் பள்ளிபற்றி என்ன முடிவு செய்யப் போகிறீர்கள் என்பதை அது சம்பந்தப்பட்ட துணை இயக்குநரிடம் சொல்லி அனுப்புங்கள். அவர் குறிப்பிட்ட வேளை என்னைத் தலைமை அலுவலகத்தில் கண்டு எடுத்து உரைக்கட்டும்’ என்றார்.

பக் ர், தாமே நேரில் காண்பதாகக் கூறினார்.

குநா, !

‘இதுபற்றிக் கல்வித்துறையில் விதிமுறைகள் இருப்பது உறுதி. அவற்றிற்கு ஏற்ப, என்ன முடிவு செய்வீர்கள் என்பது தெரிய வேண்டும். அவ்வளவு தான்! இந்தச் சிறு தகவலுக்காக, இயக்குநரே வரவேண்டிய தில்லை. துணை இயக்குநர் வந்தால் போதும்’ என்று முதலமைச்சர் ஆணையிட்டார்.

இயக்குநருக்குச் சங்கடமான நிலை, அவ்வளவு சொல்லிய பிறகு, தாமே செல்ல விரும்பவில்லை.

என்னை அனுப்பினால், எள் பிளந்தாற்போல் பதில் கூறிவிடுவேனோ என்று அஞ்சினார்.

என்னைக் கூப்பிட்டு எனக்குப் பாடம் போதித்தார்.

‘முதலமைச்சரின் அணுகுமுறை தாராளமாக இருக்குமா, அழுத்தமாக இருக்குமா என்பது தெரியாது. அவரது போக்கையொட்டி இயங்குவதே பாதுகாப்பு. ஆகவே, உன்னைக் கேட்கும்போது, கொடுக்கலாமா கூடாதா என்று பளிச்சென்று பதில் சொல்லிவிடாதே.

‘முதலமைச்சர் விரும்புகிறபடி ஆனையிட இயக்குநர்

சித்தமாயிருப் பதாகக் கூறிவிடு அவர் விருப்பத்தைத் தெரிந்து கொண்டுவா’ என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/466&oldid=623401" இலிருந்து மீள்விக்கப்பட்டது