பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நை து. சுந்தரவடிவேலு 451

முடிவு எடுக்கும் உரிமை, மக்களின் நம்பிக்கைக்குரிய முதல் வருடையது என்பதில் எனக்குத் தெளிவு இருந்தாலும் தலைமை அலுவலர்கள் தமக்கு மேலே இருப்பவர்களின் விருப்பத்தைப் பதிந்துகொள்ளும் பதிவு நாடாக்களாக மாறிவிடுவது நல்லதல்ல என்று ாள் உள்மனம் உறுத்திற்று.

ஆணைப்படி முதலமைச்சரின் பேட்டிக்குச் சென்றதால் இயக்குநர் சொல்லியபடியே சொல்லிவிட்டு வருவோம் என்று தெம்பாகச்

சென்றேன்.

சில மணித்துளிகள்கூடத் தாமதமின்றி முதல் அமைச்சர் பேட்டி கிடைத்தது.

சட்டத்துக்கு மதிப்பளிப்பவர்

‘தனியார் உயர்நிலைப் பள்ளிகள் நடத்த என்னென்ன விதிகளை நிறைவேற்ற வேண்டும்? எதை எதை எவ்வளவுக்குச் செய்ய

பவண்டும் இவற்றை இப்போதுதான் நான் தெரிந்து கொள்ளப் பாகிறேன். விவரமாகச் சொல்லுங்கள்’ என்றார் முதலமைச்சர்.

தேவையான இடம், விளையாட்டு இடம், தளவாடங்கள், ஆய்வகம், நூலகம், அறக் கட்டளை நிதி முதலியவற்றைச் சுருக்கமாகக் கூறினேன். கல்வித்துறை அவ்வப்போது விதிக்கும் தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்கள் முதலியோரை நியமித்தல், குறிப்பிட்ட சம்பள விகிதத்தில் ஊதியம் அளித்தல், பணப் பாதுகாப்பு _றுதியளித்தல் ஆகியவற்றைப் பட்டியல் போட்டுக் கொண்டுபோனபடி படித்தேன். ‘

‘வட சென்னை பள்ளிக்கூடத்தார் எவற்றை நிறைவேற்றி விட்டார்கள்? எவற்றைப் பாக்கி வைத்திருக்கிறார்கள்? இவ் விாண்டும் முதல்வரின் கேள்விகள்.

‘உரிமை கொடுத்தால்தான் பொதுப்பணத்தைச் செலவிட்டு, களவாடங்கள், படங்கள், நூல்கள் முதலியவற்றை வாங்குவார்கள். முதலில் உயர்நிலைப் பள்ளியை வேறு பணிக்குக் கட்டிய கட்டடத்தில் தொடங்கி, பின்னர் அதற்கு எனத் தனிக் கட்டடம் கட்டப்போகிறார்கள். அது ஒரிரு ஆண்டுகள் ஆகலாம். பொருள்களை வாங்குவது சில வங்களில் நிறைவேறிவிடும். -

‘தாங்கள் விரும்புகிறபடி ஆணையிடுவதாக இயக்குநர் சொல்லி விட்டு வரச் சொன்னார்’ என்று பதிலுரைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/467&oldid=623402" இலிருந்து மீள்விக்கப்பட்டது